ஆரோக்கியமான உணவுகள்

happy life

 

நம் வாழ்வின் முக்கியமான பகுதி .உணவாகும்.  நாம் எவ்வாறு சாபப்பிடுகிறோம் என்பதைவிட எதை, எப்படி சாப்பிடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.  நாம் உணவு சாப்பிடுவதில் சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.  உதாரணமாக ஆயுர்வேத ஜுிஸ் சாப்பிடுங்கள். இது செரிமானக் கோளாறைத் தடுக்கிறது. எந்த அவஸ்தைகளும் நம்மை நெருங்க விடாமல் செய்கிறது.  ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வையும் தருகிறது.  நீங்கள் நல்ல உணவுகளை தவறான முறையில் எடுத்துக் கொள்ளும் பொழுது அஜீரணம் மற்றும் வாயு தொல்லைகள் ஏற்படக்கூடும்.  இதனால் நீங்கள் இந்த உணவு பழக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.  பின்பற்றுங்கள், கடைபிடியுங்கள்.  ஆயுர்வேத டீ சாப்பிடுங்கள்.  உங்களுக்கு ஜீரணம் அதிகரிப்பதோடு நல்ல ஜீரணத்தையும் உங்களால் உணர முடியும். அத்தோடு மட்டுமில்லாமல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ஆரோக்கிய உணவிற்கான சில அடிப்படை ஆயுர்வேத வழிகாட்டுதல்கள்.

டிப்ஸ் ஒன்று.  உணவை நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும்.

டிப்ஸ் இரண்டு.  மற்றவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதோ உணவு சாப்பிட வேண்டாம்.  இதனால் உங்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது.

டிப்ஸ் மூன்று.  உணவு சாப்பிடுவதற்கு முன் குளிர் பானங்களை சாப்பிட வேண்டாம்.  இது ஜீரணத்தை மட்டுப்படுத்துகிறது.

டிப்ஸ் நான்கு.  அதிகமான திரவ உணவுகளை உணவின் போது எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இது ஜீரணத்தின் போக்கைக் குறைக்கும்.  உலர்ந்த உணவுகளுக்கு தண்ணீர் தேவைப்படலாம்.  ஆனால் சூப் போன்ற ஈரப்பத உணவுகளுக்கு தேவையில்லை.

டிப்ஸ் ஐந்து.  எப்பொழுதும் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்.  சமைப்பவரின் அன்பு கலந்த சக்தி உணவிலும் இருக்கும்.  வெறுப்புணர்ச்சியுடன் தயாரிக்கும் உணவை தவிர்த்திடுங்கள்.

டிப்ஸ் ஆறு.  புனித காரியங்களின் பொழுது சாப்பிடும் பொழுது, ஒரு கணம் நின்று, நிதானமாக, ரிலாக்ஸாக கருணை மற்றும் இரக்கத்துடன் தொடங்குங்கள்.

டிப்ஸ் ஏழு.  உணவு சாப்பிட்டபின் அடுத்த வேலையை தொடங்குவதற்கு முன்பாக உணவு ஜீரணமாக கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் எட்டு.  அவரம், அவசரமாக உணவு சாப்பிடாதீர்கள்.  மிதமான வேகத்தில் சாப்பிடுங்கள்.

டிப்ஸ் ஒன்பது.  உணவு சாப்பிட்ட பின் ஜீரணமாவதற்காக மூன்று மணி நேரம் இடைவெளி கொடுங்கள்.

டிப்ஸ் பத்து.  சூரியன் உச்சி வெயிலில் இருக்கும் பொழுது ஜீரணம் சீக்கிரம் நடக்கும்.  உடலானது பிரபஞ்சத்தை பிரதிபலிக்கிறது.  ஆகவே அதிக உணவை நண்பகலில் எடுத்துக் கொள்வது நல்லது.  காலை மற்றும் இராத்திரி வேளைகளில் ஈஸியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

டிப்ஸ் பதினொன்று.  தண்ணீரை மிதமான வெப்பநிலையில் அல்லது கொஞ்சம் சூடாக எடுத்துக் கொள்ளவும்.  ப்ரிஜ்ஜில் வைக்கப்பட்ட குளிர்பானங்கள் செரிமானத்தின் வேகத்தை குறைக்கின்றன.

டிப்ஸ் பன்னிரெண்டு    நீங்கள் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்காக, உணவு சாப்பிட்டபின் மூன்று மணி நேரம் இடைவெளி விடுங்கள்.  இப்படி சாப்பிட்டால் நமது உடல் நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 முறை வரை உணவு சாப்பிடுவதற்கான அனுமதியை அளிக்கிறது. சமநிலை இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை உணவு எடுத்துக் கொள்ளலாம்..

Leave a Reply

Your email address will not be published.