காணமல் போன மலேசிய விமானத்தின் பாகம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு

ea56b5a2-a9e5-42cb-8ffb-8c3a75f1cedc_S_secvpf

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்க்கு 239 பயணிகளுடன் (கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம்) சென்ற MH370 விமானம் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில்  தாய்லாந்து கடற்கரையில் இந்த விமானத்திற்கு சொந்தமான பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிறகு இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான தீவில் பயணிகள் விமானம் ஒன்றின் இறக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மாயமான மலேசிய விமானத்தின் இறக்கையாக இருக்கலாம் என்று பிரான்ஸ் கூறியது.மேலும், மலேசிய அரசாங்கமும் கண்டுபிடிக்கப்பட்டது MH370 விமானத்துக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறியது.

இந்நிலையில் தாய்லாந்தின் கடற்கரை அருகே மிதந்துவந்த விமான பாகம் ஒன்றை அங்குள்ள கிராமத்தினர் கைப்பற்றியுள்ளனர். தாய்லாந்தின் நகோன் சி தம்மாரட் மாகாணத்தில் இந்த விமான பாகம் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய பாகம் 2 மீட்டர் அகலமும், 3 மீட்ட நீளமும் உள்ளது. இந்த பாகம் கடலுக்கு அடியில் ஓராண்டுக்கு மேல் இருந்திருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.