மேலும் ஒரு மாணவி தற்கொலை

Evening-Tamil-News-Paper_98691523076

இரண்டு நாட்களுக்கு முன்புதான், கள்ளக்குறிச்சியில், சித்த மருத்துவ மானவிகள் மூன்று பேர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவத்தின் பாதிப்பே இன்னும் அடங்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி நேற்று விடுதி மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருபர் சண்முக ப்ரீத்தா. இவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் அண்ணா பல்கலைக் கழக விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். இவர் நேற்று இரவு விடுதியின் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்ததும் போலிசார் விரைந்து வந்து, அவரை மீட்டு அடையாற்றில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சண்முக ப்ரீத்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் அண்ணா பல்கலைக் கழக மாணவ, மாணவிகளிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது இதுவரை தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.