அம்மை தழும்பு மறைய

Smallpox-3

அம்மை நோய் ஒரு கவலைதரும் நோய் தான் உடல் முழுக்க, புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்துவிடும்.  இந்த புண்கள் ஆறிவிட குறைந்தது 20 நாட்கள் ஆகிவிடும். சர்க்கரை உள்ளவர்கள் 30 நாட்கள் மேல் காத்திருக்க வேண்டும்.  அதை விட ஒரு கொடுமை என்ன வென்றால். அம்மை நோய் தாக்கியப்பின் அதன் புண்களின் வடுக்கள் நம்மை ஆட்கொண்டு விடும். இந்த வருக்கள் மறையாது.

இதை மறைய வைக்க கீழ்க்கண்டவற்றை செய்துபாருங்கள்

1. அம்மான் பச்சரிசி செடியை கிள்ளினால், பால் வரும் அந்தப்பாலை புண்ணின் வடுக்களில் படுமாறு தடவினால் போதும் வடுக்கள் மறைந்துவிடும்.  மருக்கள் மறையக்கூட இதை செய்யலாம்.

2. பாலில் ( லாக்டிக் ஆசிட் ) உள்ள அமிலம் புண்ணின் வடுக்களை ஆற்றும். தினமும் பாலை கிண்ணத்தில் வைத்துக்கொண்டு அதை உடல் முழுவதும் பூசிவர வேண்டும்.  பாலுக்கு பதில் தயிரைக்கூட பயன்படுத்தலாம்.

3. குப்பைமேனி தலையை நன்றாக அரைத்து அதை புண்களின் வடுக்களில் அல்லது உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு உலரவைத்து குளிக்க வேண்டும்.  இப்படி செய்தாலும் உடலில் உள்ள வடுக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.