வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா?

_65041489_ban3

வாழைப்பழம் முப்பழங்களில் ஒன்று. வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் வருகின்றன.  தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், உடல் சோர்வு, வயிறு மந்திப்பு போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி விடுகின்றன.

இப்போது வாழைப்பழம் மிகவும் சலுகைவிலையில் கிடைக்கின்றது.  காரணம் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையில் அனைத்து இடங்களிலும் வாழை நன்றாகவே விளைந்துள்ளது. மேலும் செவ்வாழை இன்னும் ஒரு பழம் பத்து ரூபாய்க்கு தான் விற்கப்படுகின்றது. காரணம் இந்த பழத்தில் 5 மஞ்சள் வாழையில் உள்ள நற்குணங்கள் இதில் அடங்கியுள்ளது.

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடைகுறையுமா…,? என்று பலரும் கேள்விகளை கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். வாழைப்பழம் சாப்பிடுவதற்கும் உடல் இளைப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வாழைப்பழம் உடலுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது. மேலும் வாழைப்பழம் என்பது ஒரு சிறந்த டயட் ஆகும்.

வாழைப்பழத்தை காலையில் சாப்பிடுவதும், மாலையில் சாப்பிடுவதும் நல்லது. ஒரு நாளைக்கு     5 க்கும் குறைவான வாழைப்பழத்தையே உட்கொள்ள வேண்டும்.  அதிகமாக உட்கொண்டால் நமக்கு பிரச்சினைகள் வந்துவிடும். இதில் உள்ள கலோரிகள் அதிகம்.

பச்சை வாழைப்பழம் தினமும் 2 சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடற்பயிற்சிக்கு தேவையான உந்து சக்தி கிடைத்துவிடுகின்றது.  நமக்கு உந்து சக்தி கிடைக்க நம்மால் உடற்பயிற்சி அதிகம் செய்யமுடியும், அதிகநேரம் உடற்பயிற்சி செய்வதால் நமக்கு உடல் கட்டுக்கோப்பாக இருப்பதோடு உடலில் அதிக கலோரிகளும் கரைக்கப்படுகின்றது.  இதனால்தான் உடல் இளைக்கும்.

எனவே வீட்டில் இருந்தபடியே வாழைப்பழத்தை உண்டு விட்டு நான் இன்னும் இளைக்கவில்லை எல்லாம் பொய் என்று சொல்லிக்கொண்டிருக்காமல், தினமும் உடற்பயிற்சி செய்யுமுன் அல்லது குறைந்தது நடைபயிற்சி செய்யுமுன்பாவது நாம் வாழைப்பழம் சாப்பிடுவது மிகுந்த நல்லது.

Leave a Reply

Your email address will not be published.