உலகின் வேகமாக ஓடும் சாரா சிறுத்தை கருணைக் கொலை

WCPO_FACES_LindaCastaneda_cheetah_1406135335205_7020504_ver1.0_640_480

இரையைப் பிடித்துக் கொல்லும் வெறியுடன் சீறிப்பாய்ந்து அதிக வேகத்தில் ஓடக்கூடிய உயிரினமாக புலிகள் உள்ளன. இதனால்தான் ‘புலியின் பாய்ச்சல்’, ‘சிறுத்தையின் சீற்றம்’ என்ற அடைமொழிகள் இன்றளவும் உலவிவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவந்த ‘சாரா’ என்ற பெண் சிறுத்தை உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய சிறுத்தையாக அறியப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, வனவிலங்குகளின் வாழ்க்கையை செய்திப்படங்களாக வெளியிட்டுவரும் National Geographic Channel என்ற தொலைக்காட்சி சாராவைப் பற்றிய ஒரு குறும்படத் தொகுப்பை கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்டிருந்தது. அதில் 5.95 வினாடிகளில் சாராவின் ஓட்டவேகம் 100 மீட்டராக பதிவாகியிருந்தது. அதாவது, மணிக்கு 98.2 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல்வாய்ந்ததாகவும் உலகின் அதிவேகமாக ஓடும் சிறுத்தையாகவும் சாரா சிறப்பிடம் பெற்றிருந்தது.

சராசரியாக, இவ்வகை சிறுத்தைகளின் ஆயுட்காலம் எட்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளாக இருக்கும் நிலையில் 15 வயதை எட்டிய சாரா, சமீபகாலமாக முதுமைசார்ந்த நோய்களால் மிகவும் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தது. அது படும் அவஸ்தையை காணச் சகிக்காத சின்சினாட்டி வனவிலங்கு காப்பக ஊழியர்கள் நேற்று முன்தினம் கருணைக்கொலை அடிப்படையில் சாராவுக்கு விஷஊசி செலுத்தி சாராவின் உயிருக்கு விடையளித்தனர். புதிய உலக சாதனையை படைத்த சாராவின் ஓட்டத்தை இங்குள்ள வீடியோவில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.