தனது பேத்தி என்று கூட பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த 71 வயது தாத்தா

download (6)

இலங்கையில் வயதான முதியவர் ஒருவர் தனது  பேத்தியையே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கியுள்ளார். இந்தச்செய்தி இலங்கையையே உலுக்கியுள்ளது.

கொழும்புக்கு அருகில் உள்ள ஹாலியெல் பகுதியில் உள்ள 71 வயதான ஒரு முதியவர். தனது சொந்த மகள் வயிற்றுப் பேத்தியிடம் தான் தவறாக நடந்துள்ளார். பொகவந்தலாவவை சேர்ந்த சிறுமியின் தாயார் ( பெயர்கள் மறைக்கப்படுகின்றன ) குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும்போது தனது மகளை தனது தந்தை பராமரிப்பில் விட்டுச்சென்றுள்ளார்.

மதிமங்கிய முதியவரோ தனது பேத்தி என்று கூட எண்ணாமல் தனது பாலியல் தேவைகளுக்கு, அப்பெண்ணை ஆளாக்கியுள்ளார். இதை வெளியேயும் சொல்லக்கூடாது என்று மிரட்டி கடந்த ஒன்றரை வருடங்களாக 11 வயது பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார்.

தாய் உடல் சுகவீனம் காரணமாக மீண்டும் தாயகத்துக்கு திரும்ப, மகளின் நடவடிக்கை மாறியிருப்பதும், சோர்ந்து போய் இருப்பதையும் கண்டு தன்னுடன் தனது சொந்த ஊருக்கு மகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கே மருத்துவமனையில் காட்டும் போது மகள் தனக்கு நடந்தவற்றை தெரிவித்துள்ளார். உடனே தந்தை என்று பாராபட்சம் காட்டாமல் உடனே அப்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

வயதான அந்த முதியவரை போலிஸ் காவலில் வைத்துள்ளனர். தன் சொந்த பேத்தியே 71 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்தது வேதனை தரக்கூடிய ஒன்றுதான்.

Leave a Reply

Your email address will not be published.