துடைப்பம் கொண்டு பெருக்குவது போல் உள்ள மோடி – போட்டோஷாப் வேலை நிரூபணம்

1453443256-7229

கற்றுக்கொண்ட கலைகள் எது எதற்கெல்லாம் பயன்படுகின்றது என்று பாருங்கள். போட்டோஷாப் என்பது ஒரு நுட்பமான போட்டோ டிசைனிங் கலை. இந்த கலையை கற்றுக்கொண்டால் நமக்கு ஒரு சிறுதொழில் வாய்ப்பு நிச்சயம்.  அப்படி இருக்கையில் நமது இந்திய நாட்டின் ஆட்சியே இதை நம்பித்தான் உள்ளதோ என்று இதைப்படித்து தெரிந்துக்கொள்வீர்கள்

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி தனது இளம் வயதில், ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் துடைப்பம் எடுத்து தரையைப் பெருக்குவது போல் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. 1988ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக மோடி இருந்தபோது, அதன் பொதுக் கூட்டம் நடந்த இடத்தை பெருக்கியபோது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அஹமதாபாதைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அந்த புகைப்படம் உண்மை தானா என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கோரியுள்ளார். இதையடுத்து வந்த பதிலில், அந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்றும் கணினி மூலம் மறுஆக்க ‘வேலை’ செய்யப்பட்டது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல் சென்னை வெள்ளத்தின் போது மோடி பார்வையிட்டது போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.