ஆகாத உணவுகள் அஞ்சி

images (8)

நாம் வாழ்நாளில் எப்போதும் சேர்க்கக் கூடாத உணவுகள் என்று உள்ளது.  இது நம் உடலில் கலந்து விட்டாலே நீரிழிவு நோய் தாக்கிவிடும். அப்படிப்பட்ட உணவுகள் கீழேக்கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள்.

1. செயற்கை சர்க்கரை:

கரும்பின் மூலக்கூறில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை தான் நாம் பயன்படுத்தும் இயற்கை சர்க்கரை.  செயற்கை சர்க்கரை என்பது வேதிப்பொருட்களை வைத்து அதிகமாக தயாரிக்கப்படுவது. இது ஐஸ்கிரிம் களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.  சிறிது கலந்தாலே போதும், அதீத இனிப்புச்சுவை நிறைந்து காணப்படும். இது நீரிழிவு நோயை உருவாக்கும்.

2. சோடா நீர்:

சோடா நீர் கலந்த பானங்கள், உடலை உருகுலைத்துவிடும். பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் உள்ள சோடா நீர். இப்போது கடைகளில் குளிர்பானங்களாக வந்துவிட்டது. குளிர்ப்பானங்கள் தயாரிக்கும் கம்பெனிகளில் சோடாவையும் கலந்துவிட்டார்கள்.  இது எலும்பு மற்றும் உடலுக்கு பலவீனத்தை கொடுக்கும்.  இதில் உள்ள சர்க்கரை, அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோய் அதிகரிக்கும்.

3. தீய்ந்துப்போன வறுத்த உணவுகள்:

எண்ணெயில் பொறித்த உணவுகளே உடலில் கொழுப்பை அதிகரிக்கின்றது. இது கெட்ட கொழுப்பை உடலில் அதிகமாக சேர்த்துவிட்டு, உடலை பருக்கச்செய்கின்றது.  அதேபோல் இந்த தீய்ந்துப்போன உணவுகள் உடலில் புற்றுநோயை உண்டாக்கும்.  இதனால் தீய்ந்துப்போன உணவுகள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும், தோசை, பீட்சா மற்றும் ரொட்டி வகைகள் தீய்ந்துப்போனால் சாப்பிடாதீர்கள்.

4. பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால் என்ன தெரியுமா? இந்த உணவுகள் இறைச்சி, மீன், காய்கறி போன்றவைகளை நன்றாக அரைத்து வேதிப்பொருட்கள் கலந்து அதை அழுகாத பொருட்களாக மாற்றி தருவது தான்.  இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.  இது எந்தக்காலமும் நம் நாட்டு மக்களுக்கு ஆபத்து.  நேரடியாக அறுத்த இறைச்சியே 7 மணிநேரம் தாக்குபிடிக்காத நிலையில் இது சாத்தியம் கிடையாது.  இது உடலில் சென்று பல் பிரச்சினைகளை உருவாக்கும், உடல் பருமன், வாடை அடித்தல், செரிமானப் பிரச்சினைகள் இப்படிப் பல.

5. எல்.டி.எல்

செயற்கையான வெண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகள் LDL  என்று அழைக்கப்படுகின்றது.  இது உடலில் கலப்பதால் நமக்கு வயிற்றுவலி, தொப்பை, பசி அதிகமாதல், எந்நேரமும் சாப்பிடத்தோன்றும் எண்ணம் போன்றவைகள் உருவாகின்றது.  இதை நாம் உணவில் எப்போதும் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published.