முதலுதவி கவனிக்க

first aid

முதலுதவி அனைவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அவசர நிலைகளில் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்கே கூட இது பயன்படக் கூடும்.  ஆனால் இதை சரியாக அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது.  ஏனென்றால் தவறான முதலுதவி முறைகள் ஆபத்தான விளைவுகளைத் தரக் கூடியது.  பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு புற்று நோயை ஏற்படுத்தும். அதிர்ச்சி.  அது போல பொதுவாக நாம் செய்யும் சில அவசர முதலுதவிகளில் தவறான முறைகளை பயன்படுத்துகிறோம்.  அதில் நாம் செய்யும் தவறுகள் என்ன.  அதனால் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதைப் பற்றி இனி காண்போம்.

பெரும்பாலும் நாம் செய்யும் முதலுதவி தவறுகள்.

  1. உராய்வு மற்றும் வெட்டுக் காயங்கள்.

உங்கள் விரல் அல்லது கால், கைகளில் உராய்வுகள் ஏற்படுகிறது.  காய்கறி வெட்டும்போது வெட்டுக் காயங்கள் ஏற்படுகிறது.  அதற்கு உடனே அந்த இடத்தில் ஜஸ் வைக்க வேண்டாம்.  முதலில் ஈரமான துணியை வைத்து அவ்விடத்தை கட்டவும். துணி நன்கு ஈரமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.  பிறகு நன்கு துடைத்தபிறகு, அந்த இடம் வீணாகாமல் இருக்க ஜஸ்பேன் பயன்படுத்துங்கள்.  இம்முறை பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

  1. பல் உடைந்தால்

அடிபட்டு பல் உடைந்துவிட்டால் உடனே அந்த இடத்திற்கு அழுத்தம் தர வேண்டாம்.  இரத்தம் வராமல் அல்லது வலிக்காமல் இருக்க பதமான கைகளை வைத்து இலகுவாக அழுத்தம் தரலாம்.  முக்கியமாக உடைந்த பல்லை பாலில் போட்டு வைக்கவும்.  இதனால் உடைந்த அந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் ஒட்ட வைக்க முடீயும்.

  1. தீக்காயங்கள்.

தீக்காயங்கள் ஏற்பட்டவுடன் எரிச்சல் இல்லாமல் இருப்பதற்கு பால் அல்லது வெண்ணெய்யை பயன்படுத்துவார்கள்.  இது தவறான அணுகுமுறையாகும்.  அதெ போல் தீக்காயம் ஏற்பட்டால் ஃபைபர் துணிகள் வைத்து போர்த்த வேண்டாம்.  இது தோளோடு ஒட்டிக் கொள்ளும்.  சிறு, சிறு தீக்காயங்கள் என்றால், கழுவிய பிறகு அன்டி-பயாடிக் பயன்படுத்தி மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள்.

  1. எலெக்ட்ரிக் தீக்காயங்கள்.

எலெக்ட்ரிக் தீக்காயங்கள் வெளியில் தெரியும் காயங்களை விட உள்ளே அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.  எனவே நீங்களாகவே சிறிய காயம் என்று நினைக்காமல் உடனே மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டியது அவசியம்.

  1. கணுக்கால் சுளுக்கு

கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டால், காலை உதறுவது தவறு.  சிலர் உடனே காலை நன்கு உதறச் சொல்வார்கள்.  அவ்வாறு செய்ய வேண்டாம்.  இது தசை பிளவு ஏற்படுவதற்கும், வலி அதிகமாவதற்கும் காரணமாகி விடுகிறது.  சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் ஜஸ் வையுங்கள்.  இது வீக்கம் பெரிதாகாமல் தடுக்கும்.  சரியான டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதுதான் சுருக்கமாக சுளுக்கை சரிசெய்ய சிறந்த முறையாகும்.

  1. மூக்கில் இரத்தம் வழிதல்

மூக்கில் இரத்தம் வழியும் போது. உடனே பின்னோக்கி படுக்க கூறுவார்கள்.  இது இரத்தம் வழிதலை குறைக்கும் என்று கூறுவார்கள்.  ஆனால் இவ்வாறு செய்யக் கூடாது.  நேராக அமர்ந்து தலையை மட்டும் மேல்நோக்கி நிமிர்த்தி வைக்க வேண்டும்.  இலகுவாக இரத்தம் வழியும் மூக்கின் பக்கம் அழுத்தம் தாருங்கள்.  10-15 நிமிடத்திற்குள் இரத்தம் நின்று விடும்.  அப்படி இல்லை என்றால் மருத்துவ மனைக்கு உடனே அழைத்துச் செல்லுங்கள்.

  1. விஷம்

விஷம் சாப்பிட்டாலோ அல்லது தெரியாமல் உண்டுவிட்டதாக நினைத்தாலோ உடனே வாந்தி எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.  இதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.  ஆகவே உடனே மருத்துவ மனைக்குச் செல்வதுதான் உடனடி தீர்வைத் தரும்.

  1. வலிப்பு

வலிப்பு ஏற்படும் பொழுது, நன்கு காற்றுவரும்படி நோயாளிக்கு இடம் விட வேண்டும்.  அவர்களது வாயில் உணவோ, நீரோ ஏதும் கொடுக்க வேண்டாம்.  வலிப்பு அதிகமாவது போல் இருந்தால் உடனடியாக மருத்துவமனனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம்.  காக்கா வலிப்பாக இருந்தால் இரும்பு பொருட்களை கையில் கொடுத்து அழுத்தமாக பிடிக்கும்படி செய்யலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.