இரவில் உண்ணக்கூடாத உணவுகள்

download (4)

சில உணவுகள் சரியான நேரத்தில் தான் சாப்பிடவேண்டும்.  இந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது செரிமானப்பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

கீரை வகைகள் எதுவானாலும் செரிமானமாக ஆறுமணி நேரம் ஆகும்.  இந்த கீரைகளில் முழுவதும் சத்துக்கள் உள்ளது.  அதனால் குடல் மெதுவாக உறிஞ்சுக்கொண்டுதான் செரிமானம் செய்யும். இது இரவு நேரத்தில் நடக்காது. உடல் அயர்ந்து தூங்கும் போது செரிமானம் ஆகாமல் வாந்தி மற்றும் புளித்த ஏப்பம் வர வைத்துவிடும்.

சூடான தேநீர் அல்லது காபி அல்லது வெந்நீரை குடிக்க நேர்ந்தால், தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே முடித்துவிடுங்கள்.  இந்த சூடான திரவம், வயிற்றுக்குள் சென்றவுடன் உடனே சிறுநீரகத்தை துரிதப்படுத்தும்.  இதனால் சிறுநீர் அதிகரிப்பதால், நம்மால் தூங்க முடியாது. அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

வாழைத்தண்டு, ஆவாரம் பூ, முள்ளங்கி, குளிர்பானங்கள் போன்றவைகளை இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டாம். இதனால் வயிற்றில் திரவம் அதிகரித்து, தூக்கத்தை கெடுத்துவிடும்.

இரவு சாப்பாடு முடித்துவிட்டு உடனே தூங்கி விட வேண்டாம்.  இது செரிமானத்தை பாதித்துவிடும். இந்த இரவுச்சாப்பாடு முடிந்தபின் சிறிது நேரம் கால் நீட்டி உட்காரலாம். சிறிது நேரம் நடக்கலாம். பின்னர் வாழைப்பழம் மட்டும் ஒன்றை சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடவும்.  கறி மற்றும் அசைவ உணவுகளான முட்டைகளை சாப்பிடும் போது உடனே தூங்காமல் இருப்பது நலம்.

Leave a Reply

Your email address will not be published.