இனிப்போடு கொஞ்சம் உப்பும் சேர்த்துக்கொள்வது ஏன்?

images (7)

உறவினர் திருமணங்கள் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது, பரிமாறப்படும் உணவில் இனிப்பு வகைகள் இருக்கும், காரவகைகள் இருக்கும் மற்றும் அறுசுவை உணவும் இருக்கும் ஆனால் ஓரத்தில் சிறிது உப்பு வைப்பார்கள்.  இதை நாம் பார்த்தும் பார்க்காதது போல் வந்துவிடுவோம், நிச்சயம் இந்தக் கட்டுரையை படித்தப்பின்பு யாரும் இந்த தவற்றை ஒருபோதும் செய்ய மாட்டீர்கள் என்று நம்புவோம்.

இனிப்பு நிறைந்த பழங்கள், தின்பண்டங்கள் நாம் சாப்பிடும்போது சிறிது உப்பை தூவி சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகரிக்கும்.  சாதரணமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதற்கும் அதன் மேல் லேசான உப்பை தெளித்து சாப்பிடுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு.  இது போல் தான் உப்பை அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளக் கூடாது.  இது சிறுநீரகத்தில் கல்லை உருவாக்கும் காரணியாகும்.

எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்கள் அதிகம் சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் குடித்தாலோ, உடலில் அமிலம் அதிகமாகி, புளித்த ஏப்பம் வந்துகொண்டே இருக்கும்.  அதை தவிர்க்க நாம் எலுமிச்சையுடன் சிறிது உப்பும் கலந்து சாப்பிட்டால் போதும். வயிற்றில் காரம் மற்றும் அமிலத்தன்மை சரிசமமாகிவிடும்.  இவ்வாறு சாப்பாட்டில் உப்பு இன்றியமையாதது.  உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர்.

உப்பு உடலில் பொட்டாஸ் சத்தை சரிசமமாக்குகின்றது.  பழங்கள், இனிப்புகள், பாயசம், சாப்பாடு வகைகள் எதிலும் சிறிது உப்பை மட்டும் தூவி விட்டு சாப்பிடுங்கள் போதும்.   புளிப்புத்தன்மையை குறைக்க இந்த உப்பு உதவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.