திரெட் மில்லில் ஓடினால் ஆபத்தா?

tredmill

பெரும்பாலும் உடல் இளைக்க தேர்ந்தெடுப்பது ட்ரெட் மில் ஒன்று.  இந்த ட்ரெட் மில்லைப் பயன்படுத்தி காலை மாலை ஓட்டப்பயிற்சியை இதிலே முடித்துவிடலாம்.  மிகவும் எளிதான ஒன்று, வெளியில் யாரும் பார்க்காமல் அறைக்குள்ளேயோ அல்லது ஜிம்முக்குள்ளேயோ ஓடலாம். உடலும் களைத்துப்போகாது. பாதுகாப்பானது. என்று பல சிறப்பம்சங்கள் ட்ரெட் மில்லுக்கு இருக்கின்றது என்பது உண்மைதான்.

ஆனால் ட்ரெட்மில்லைப் பயன்படுத்தும் போது நாம் ஓடுபாதையானது நம்மை விட அதிக ஓட்டத்தில் இருக்கும்.  இதன் மீது நம் கால்களை வேகமாக ஓடவைத்து அதன் வேகத்தை ஈடு கட்டவேண்டும்.  அப்படி ஓடுவதற்கும் சாதரணமாக நாம் தரையில் ஓடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.  சாதரணமாக ஓடுவதற்கு பதில் ட்ரெட்மில்லில் ஓடும் போது  மூட்டுப்பகுதியானது அதிகமாக பாதிக்கப்படும்.

ட்ரெட்மில்லில் வேகமாக ஓடினாலும் இரைப்பு வாங்காது. அதே சமயம் நிறைய நேரம் ஓடலாம். ஆனால் இது நல்லதல்ல, இயற்கையாக உடல் தரையில் ஓடும் போது, நம் உடலால் இயன்ற அளவு ஓடிவிட்டு, நாம் நின்றுவிடுவோம்.  இது இதயத்திற்கு மிகுந்த நல்லது. போக போக தான் வேகம் கூட்டவேண்டும்.   வேகமாக ஓடும் சிறுத்தைப்புலி  2 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். ஆனால் 10 நொடிகளில் சிறுத்தை ஓடுவதை நிறுத்தாவிட்டால் அதே இடத்தில் மரணம் தான் அதற்கு.

ஒரு காட்டுச்சிறுத்தைக்கே இந்த கதி என்றால் மனிதன் என்ன செய்ய வேண்டும். ட்ரெட் மில்லை பயன்படுத்தி ஓடும் போது மணிக்கு 10 கி.மீ என்ற வேகத்தில் ஓடினால் போதும்.  அதிகபட்சமாக 12 கி.மீ வேகத்தில் 5 நிமிடம் ஓடிவிட்டு நின்று பின் மறுபடி தொடங்க வேண்டும்.  ஓரே அடியாக தொடர்ந்து ஓடும்போது, பழக்கப்படாத இதயம் பாதிக்கும்.

ட்ரெட் மில் தானே என்று நினைக்காமல், அதற்குரிய வரையறையும் கொண்டு உடற்பயிற்சி செய்தால் நல்லது. முன்னாடி உள்ள கைகளை பிடித்துக்கொண்டு ஓடக்கூடாது, சேப்டி பின் இருந்தால் அதை மாட்டிக்கொள்ளவேண்டும். வெறும் கால்களில் ஓடினால் உராய்வு குறைவாக இருக்கும். அதனால் வழுக்கி விழத்தோன்றும். இதனால் ஷூ அணிந்துக்கொள்ளலாம்.  நேராக ஓட வேண்டும். குனியக்கூடாது.  முன்பகுதியில் சாய்ந்து ஓடினால் மூட்டுவலி அதிகரிக்கும். நெஞ்சு படப்படத்தால் அமைதியாக உட்கார்ந்து உடனே தண்ணீர் அருந்தாமல் 2 நிமிடம் இடைவெளிவிட்டு குடிக்கவும். வீட்டில் குழந்தைகளை ட்ரெட் மில் அருகே சேர்க்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.