கிவி பழம் சாப்பிட்டால் உடல்நலம் உறுதி

kiwi 9india

கிவி பழம் என்கிற பசலிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து உடல் சம்பந்தப்பட்ட நலனுக்கு நன்மையை விளைவிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிவி பழத்தி்ல் தோல் பச்சையாக இருக்கும்.  கிவி பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் சேர்ந்த சதையுடனும் இருக்கும்.  இதை நம்ம ஊர் கடைகளில் விற்பனைக்கு விற்கும் கேக் மற்றும் பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

கிவிப் பழத்தில் உடல் நலனுக்கு அவசியமான சத்துக்கள் அதிகம் இருப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறுவதாவது.

கிவி பழத்தில் அதிகமாக மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகமாக இருக்கிறது.   தோல், இதய நோய்கள், புற்று நோய், உடல் எடை உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் ” சி ” நம்மை பாதுகாக்கிறது.   வைட்டமின் ” சி ” யின் வேலையை விட்டமின் ” இ ” அதிகரிக்கச் செய்கிறது.  இந்த இரண்டு குணங்களும் கிவி பழத்தில் அதிகமாக இருக்கிறது.   கிவிப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நமது உடலை பாதுகாக்கிறது. கிவி பழத்தில் நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளன.  கிவி பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதளால் சர்க்கரை நோய் குணமாகிறது..  இரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.   கிவி ப்ரூட் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் அவற்றை குணப்படுத்தும்.  கிவி பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.