சிக்கன் நமக்கு ஆபத்தானதா?

chickens

என்ன தான் வீட்டில் ஆட்டுக்கறி குழம்பு வைத்திருந்தாலும், கோழிக்கறியை சாப்பிடும் பிரியர்கள் அதிகம் தான்.  கோழிக்கறி உடல் சூட்டை அதிகரிக்கும்.  அது மட்டுமல்லாது கோழிக்கறியை ரசம் வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாகவும், சளி, இருமல் மட்டும் நெடுநாட்கள் படுக்கையில் இருந்தவர்கள் கூட எழுந்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் வீட்டில் நாட்டுக்கோழி, சேவல்களை வளர்த்து அதை ஞாயிற்றுக்கிழமைகளில் அடித்து சாப்பிடுவார்கள்.  இந்தக் கோழிகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது வயல்வெளிகளில் கிடைக்கும் தாவரங்கள், பூச்சிகள் மற்றும் நீர் ஆகியவற்றை உண்டு ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் தற்போது கறிக்கோழி என்ற பெயரில் பாவம் விவசாயக் கோழிகள் ( போந்தா ) பிடித்து வளர்த்து அவைகளுக்கு உடல் பருமன் மற்றும் எடையை அதிகரிக்க அதிக ஸ்டெராய்டு கொடுத்து விடுகின்றார்கள்.  இது உடலை இன்னும் பருமன் ஆக்குகின்றது.

இந்த கோழி நன்றாகத்தான் வளர்கின்றது. பார்க்க ஆரோக்கியமானது போல் தெரிந்தாலும், உடல் வளர்ச்சிக்காக அதன் ஹார்மோன் அதிகப்படுத்தப்படுகின்றது.  இது மனித உடலுக்கு தீங்கை தரும். புற்றுநோய் உண்டாக்கும்.  அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய்ப்புரதம் கொண்டிருப்பதால் சீக்கிரம் மாரடைப்பு வரும். பெண்களுக்குதான் இந்த ஹார்மோன் பல மாறுதல்களை உடலில் கொண்டு வந்து விடும்.  இந்தக் கோழிகளைப்போல் பெண்கள் பருத்துவிடுவர். ஆணைப்போன்ற தோற்றம். குரல் மாற்றம் போன்றவை வந்துவிடும். சிறுமியர்கள் ஹார்மோன் மாற்றத்திற்கு ஆளாகி, சிறுவயதில் பருவமடைதல், முதிர்தல் போன்றவை ஏற்பட்டுவிடும்.

மேலும் இதைக் கண்டுபிடிக்க கூடாது என்று தீவனங்களில் கலந்து விடுகின்றார்கள்.  இந்தக் கோழிகள் முட்டையில் இருந்து பொரித்த இரண்டு மாதங்கள் கூட ஆகாது ஆனால் கோழி இரண்டு கிலோ இருக்கும்.  இதற்கு நடக்கக்கூட தெரியாது.  கூண்டை விட்டு வெளியே விட்டால் தீனிப் பொறுக்க தெரியாது.  ஏன் பல சேவல்களுக்கு பொழுதா பொழுதுக்கு கூவக் கூட தெரியாது.  அப்படி இருக்கையில் இதைக் கொண்டு சமைத்த கறி எப்படி ஆரோக்கியமான கோழிக்கறியாகும்?

இதனால் இனிமேல் கோழிக்கறியை சாப்பிடுமுன் சற்று யோசித்துவிட்டு, பக்கத்தில் சென்று காய்கறி சூப் அல்லது பட்டாணிக்கடலையை வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.