வாழ்வதற்கு ஏற்றச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22 வது இடம்

indian-culture

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தை பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உலகின் முக்கிய 60 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தக தலைவர்கள், பிற உயர் அதிகாரிகள் என மொத்தம் 16,200 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாரம்பரியம், கலாசாரம், தொழில்முனைதல், உள்கட்டமைப்பு, வாழ்கை தரம் உள்ளிட்டவற்றை அடிப்படையில் ஆய்வு செய்து இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

டாப்-10 : இப்பட்டியலில் டாப்-10 வரிசையில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 மற்றும் 3வது இடங்கள் முறையே கனடாவும், இங்கிலாந்தும் வகிக்கின்றன. அமெரிக்காவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் சுவீடன்(5), ஆஸ்திரேலியா(6), ஜப்பான்(7), பிரான்ஸ்(8), நெதர்லாந்து(9), டென்மார்க்(10) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சீனாவுக்கு 17வது இடம் கிடைத்துள்ளது.

22வது இடத்தில் இந்தியா : இப்பட்டியலில் இந்தியா 22வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகையில், பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கல்வி தரத்தில் உயர்ந்துள்ள இந்தியா, தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் முக்கிய மையமாக உள்ளது.

ஆனால் மக்கட்தொகை காரணமாக, வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தியில் பின் தங்கியுள்ள இந்தியா, உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் உண்மைதான் இன்னும் நம் சராசரி வருமானம் ஒரு நாளைக்கு 150 ரூபாய் தான்.  மற்ற நாடுகளில் ஆயிரம் ரூபாய்க்கு தாண்டும்.  அப்படி இருக்கையில் இந்த பட்டியலில் 22 வது இடம் கிடைத்ததே பெரிய விசயம் தான்.  ஆனால் நாம் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டத்தக்க கூடியது. அதைவிட அனைத்து மதத்தவரும், இனத்தவரும் வாழும் ஒரே நாடு நம் இந்தியா தான். இது சொர்க்க பூமி. எதற்கும் குறைவில்லா நாடு.

Leave a Reply

Your email address will not be published.