கள்ளக்காதல் விவகாரம் – மாணவியை குத்திவிட்டு தானும் தூக்கு மாட்டிக்கொண்ட கள்ளக்காதலன்

02-1422857645-women-abuse56-600
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூரைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் குருவானந்தத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குருவானந்தத்திற்கு திருமணத்திற்கு முன்னரே இதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் குருலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. குருலட்சுமி, ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், குருலட்சுமி அரசு பேருந்து ஒன்றில் சென்றுள்ளார். அதே பேருந்தில், குருவானந்தமும் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்தில், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வன்னியம்பட்டி விலக்கு அருகே பேருந்து வருந்து கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரையும், நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார்.
இப்போது எதிர்பாராத விதமாக, குருவானந்தம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குருலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதலால்,  குருலட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குருவானந்தம், குருலட்சுமி இறந்துவிட்டார் என்று கருதி அருகில் இருந்த மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் வெட்டுக் காயங்களுடன் மயங்கிக்கிய நிலையில் கிடந்த குருலட்சுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், குருலட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.