மஞ்சள் கரு பலன்கள்

egg yellow

 

முட்டையில் அதிக சத்து உள்ளது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்”று தான்.  தினந்தோறும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.  முட்டை சாப்பிடும் பொழுது பலர் அதன் மஞ்சள் கருவைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.  ஏன் என்று கேட்டால் முட்டையில் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் உள்ளது என்று சொல்வார்கள்.  உங்களுக்கு ஒன்று தெரியுமா.  முட்டையில் வெள்ளைக் கருவை விட மஞ்கள் கருவில்தான் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.  அதிலும் இந்த மஞ்கள் கருவை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தி சமைத்து சாப்பிடும் பொழுது, ருசியாக இருப்பதுடன் இன்னும் அதிகமான பயன்களைப் பெறலாம்.  சரி.  இப்போது மஞ்சள் கருவை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

முட்டையின் மஞ்சள் கருவை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்.

  1. அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள்.

மஞ்சள் கருவில் வெள்ளைக் கருவை விட அதிக அளவில் இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளது.  சொல்லப்போனால் வெள்ளைக் கருவில் புரோட்டீன் மட்டும்தான் உள்ளது..

  1. வைட்டமின் கே

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.  எலும்புகளுக்கு இந்த வைட்டமின் நல்லது.  மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது.

  1. மூளைக்கு நல்லது.

முட்டையின் மஞ்சள் கருவில் கோலைன் என்னும் பொருள் அதிக அளவில் உள்ளது.  இது மூளையின் செயல்பாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.  கோலைன் தான் அல்சைமர் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

  1. ஆற்றலை அதிகரிக்கும்

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டு வந்தால், நாள் முழுவதற்குமான தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

  1. புற்றுநோயைத் தடுக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி யில் செலினியம் என்னும் பொருள் அதிகமுள்ளது.  இது மார்பக மற்றும் குடல் புற்று நோயைத் தடுக்கிறது.

  1. இரத்தத்திற்கு நல்லது.

முட்டையில் கோலைன் என்னும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருள் உள்ளது.  கோலைன் இரத்த நாளங்களை பாதிக்கும் ஹோமோசைஸ்டீனை ஒழுங்குபடுத்துகிறது.

  1. கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

எல்லோரும் முட்டையின் மஞ்சள் கரு கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்றுதான் நினைக்கிறார்கள்.  ஆனால் கல்லீரல் உடலுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்வதோடு, முட்டையில் மஞ்சள் கருவை உட்கொள்ளும் பொழுது, கல்லீரல் கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைத்து விடும்.  எனவே உடலில் சீரான அளவில் தான் கொலஸ்ட்ரால் பராமரிக்கப்படும்.

  1. காயங்கள்

முட்டையில் உள்ள மிகுதியான கோலைன் சத்தால், உடலின் உள் பாகங்களில் ஏற்படும் காயங்களைத் தடுக்கும்.

  1. பக்கவாதத்தை தடுக்கும்

முட்டையின் மஞ்சள் கரு சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கிறது.  உடலில் ஆக்ஸிஜன் காற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது.  பக்கவாதத்தை தடுக்கிறது.

  1. கண்களுக்கு நல்லது

குறிப்பாக மஞ்சள்கரு கண்களுக்கு நல்லது.  அதிலும் வயதான பின் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை முட்டையின் மஞ்சள் கரு தடுக்கிறது.  குறிப்பாக கண் புரை ஏற்படுவதை முட்டையின் மஞ்சள் கரு தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.