பனங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

download (3)

பனங்கிழங்கு நிறைய பேர் இந்தப்பெயரை கூட இப்போது தான் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இந்த பனங்கிழங்கு என்பது பனமரத்தில் விளைவது கிடையாது.  பனமரத்தின் அடியிலும் விளையாது.   ஒரு சிறு பனமரம் தான் இந்த பனங்கிழங்கு.  கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? பனைமரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும்.  இளசாக இருக்கும் போது அதை சாப்பிடலாம். ஆனால் முத்திப்போனால் சாப்பிட ஆகாது.

இதை இப்படியே விடாமல் மண்ணில் புதைத்துவிட்டால் கொஞ்ச நாட்களில் முளைவிட்டு பனைமரம் வளர ஆரம்பித்துவிடும்.  அப்படி முளைவிட்ட உடனே தோண்டிப்பார்த்தால் அது தான் பனங்கிழங்கு.  அதை பிடுங்கி வந்து வேகவைத்து சாப்பிடுவர்.

மக்காச்சோளத்தில் உள்ளது போல முடிகள் நிறைய காணப்படும்.  நார்ச்சத்து அதிகம் இந்த கிழங்கில்.  ஒரு பெரிய பனைமரமே இந்த கிழங்கில் தான் உள்ளது.  இதனால் இதை சாப்பிட்டால் நமக்கு பலம் கிடைத்துவிடுகின்றது.

உடல் இளைத்தவர்கள் கூட பனங்கிழங்கு கிடைக்கும் சீசனில் சாப்பிட்டால், உடனே பருமனாகிவிடுவார்கள்.  நாம் நீரில் சேர்க்கும் உப்பைப் பொறுத்து இந்த கிழங்கின் ருசியானது இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே இந்த கிழங்கில் உள்ளது.  எனவே இதைச்சாப்பிட்டப்பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் மேலோங்கும்.

Leave a Reply

Your email address will not be published.