இரத்தம் கெட்டால் சத்தம் கெடும் – இரத்தத்தை சுத்தமாக்கும் வழிகள்

images (5)

நம் உடல்பாகங்களை எப்படி தினமும் சுத்தப்படுத்திக்கொள்கின்றோமோ அதைப்போலவே நம் உடலில் உள்ள உட்பாகங்களையும் நாம் சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.  இரத்தத்தை சுத்தம் செய்து கொள்வதால் நம் உடலில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் சரியாகிவிடும்.   இரத்தத்தை சுத்தம் செய்ய நாம் செய்ய வேண்டியது நல்ல உணவுகளை உட்கொள்வது தான்.

இரத்தமானது, முறையற்ற உணவுப்பழக்கங்கள், குடி மற்றும் புகை பிடித்தல் மூலம் தான் கெட்டுப்போய்விடுகின்றது.  இரத்தப்புற்று நோய் கூட இந்த அசுத்தமான இரத்தத்தில் இருந்து தான் வருகின்றது.   இரத்தத்தை சுத்தம் செய்யத்தேவையான உணவுகள் கீழேக்கொடுக்கப்பட்டுள்ளன.

1. காலையில் மற்றும் இரவு வேளைகளில் நெல்லிக்காய்ப்பொடி சாப்பிட வேண்டும்.  அல்லது தினமும் நெல்லிக்காய்களை இரண்டு சாப்பிட்டு வரவேண்டும்.

2. ஆப்பிள் பழத்தை சாறாக்கி குடிக்கலாம்.  புரூட் ஜூஸ் உடலுக்கு ஏற்றது.

3. கீரை வகைகள் உடலுக்கு நல்லது.

4. திராட்சைச் சாற்றை வாரம் இருமுறை ( கருப்பு திராட்சை ) சாப்பிட வெண்டும்.

5. சிவப்பு நிறப்பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

6. வெங்காயத்தை தினமும் காலையில் ஒரு சொம்பு நீராகாரத்துடன் இணைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி சுறு சுறுப்பு அடைந்து விடும்.

7. இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். இது உடலில் இரத்தம் சுத்தமாகி உடல் உஷ்ணம் தவிர்க்கப்படும்.

8.மாதுளையை தவறாமல் எடுத்துக்கொள்ளலாம்.  இது பெண்களுக்கு மேலும் பலனளிக்கக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.