கரும்பு அதை விரும்பு – கரும்பு ஜூஸை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

juice-21

வருடத்தொடக்கத்தில் இருந்தே கரும்பின் விற்பனையும் அதிகரித்துவிடும்.  எல்லா இடங்களிலும் சர்வ சாதரணமாக கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்துடன் கரும்புச்சாறு விற்பவர் வேக வேகமாக சாறை பிழிந்து விற்றுக்கொண்டிருப்பார்.  இந்த கரும்புச்சாற்றை குடிக்கலாமா வேண்டாமா, சளி பிடிக்குமா, இருமல் வருமா? என்று பல கேள்விகளுக்கு நடுவில் நாவில் எச்சில் ஊறும்.

கரும்பு சாப்பிடுவதால் சளி பிடிக்காது.  ஏற்கனவே நெஞ்சில் உள்ள சளியை இருமல் மற்றும் மூக்கு வழியாக வெளியே கொண்டுவரும்.  இந்த கரும்புச்சாறு குடிப்பதால் நமக்கு கீழ்க்கண்ட நன்மைகள் விளைகின்றன.

1.கரும்புச்சாறு பற்களை, குடலை, இரைப்பையை சுத்தமாக்குகின்றது.  உணவுப்பாதையில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.

2.கரும்புச்சாறு காலையில் குடிப்பதால், ஏற்கனவே இரைப்பையில் உள்ள உணவுகளை துரிதமாக செரிமானம் அடையச்செய்து பசியை தூண்டுகின்றது.  மலச்சிக்கலை அரவே இல்லாமல் செய்து விடுகின்றது.

3.கரும்புச்சாற்றை நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.  ஏனென்றால் கரும்பில் உள்ள சுக்ரோஸ் என்ற வேதிப்பொருள்தான் சர்க்கரை உருவாக காரணம்.

4. உடல் பருமன் குறைந்துவிடும். கொழுப்பை கரைத்துவிடும்.

5. உடலுக்கு தெம்பை தரும். வயிற்றுக்கு குளிர்ச்சியை தரும்.

6.கிடைக்கும் போதெல்லாம் கரும்புச்சாற்றை குடித்து விடவேண்டும்.  இதனால் உடலில் கால்சியம் மற்றும் மினரல்ஸ் அதிகமாகியுள்ளது.

எனவே கரும்பை கடித்து சாப்பிட முடியாதவர்கள் ஜூஸையாவது குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.