காலை உணவாக பிரட் எடுத்துக்கொள்ளலாமா?

download (2)

இந்த அவசரயுகத்தில் எல்லாமே அவசரம் தான் காலையில் அரக்க பறக்க எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு பிரட் தான் பெரும்பாலும் காலை உணவாக மாறிவிடுகின்றது.  பிரட்டின் நடுவில் ஜாமை தடவிவிட்டு அல்லது எதையாவது வைத்து வேகமாக சாப்பிட்டு விட்டு கிளம்பிச் சென்றுவிடுகின்றனர்.

இந்த எளிதான காலை உணவு நேரத்தை மிச்சப்படுத்தலாம், ஆனால் உடல்நலம் சீர்கேட்டால் உடல் கெட்டுப்போய் காசை செலவுப்படுத்திவிடும்.  இதுதான் பிரட்டின் சாதனை.   பிரட் உடம்புக்கு ரொம்ப நல்லதுதான் ஆனால் இந்த மைதாமாவினால் செய்யப்பட்ட வெண்மை நிற பிரட் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது.  பேக்கரிகளிலும், கடைகளிலும் மென்மையான பிரட் வேண்டும் என்று மைதாவையே  பயன்படுத்துகின்றனர்.

கோதுமை பிரட் ருசியின்றி கடினமாக மிருதுவாக இருக்கும்.  இந்த பிரட்டை சாப்பிடப் போகும் முன்பே கோதுமையின் வாசம் அடிக்கும்.  ஆனால் மைதா பிரட் மென்மையாகவும், மணமாகவும் இருக்கும்.  இதனால் தான் கடைவாசிகள் இதை தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த மைதா பிரட்டினால் செய்த  எந்த உணவும் நமக்கு கேடுதான்.  இது ரத்தத்தில் கலந்து நம்மை பாடாய்படுத்தி விடும்.  பிரட்டை சாப்பிட்ட உடன் நாம் அனுபவிக்கும் பிரச்சினைகள்.

1. காலையில் மைதா பிரட்டினால் செய்த உணவினை உண்ணும்போது வயிற்றில் செரிமானப் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

2. இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி நீரிழிவு நோயை உருவாக்கும்.

3.உடல்பருமன் மற்றும் எப்போதும் வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

4. தலைச்சுற்றல், வாந்தி, பேதி போன்றவைகளை உருவாக்கும்.

5. புளித்த ஏப்பம், குடலில் சிக்கிக்கொள்வது, மலச்சிக்கல் ஆகியவைகளை இந்த மைதா பிரட் உருவாக்கும்.

மைதா பிரட் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல, வாங்கும் போதே கோதுமை பிரட் வாங்கிக்கொள்ளுங்கள். ருசி குறைவாக இருந்தாலும் உடலுக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published.