பொதுத்தேர்வில் பிட் அடித்தால் இனிமேல் ஜெயில் தான்

bihar_cheating--3-650_032115091441

பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பியடித்தால் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும், பெற்றோர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. பீகாரில் சென்ற வருடம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவ – மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு பிட் பேப்பர், புத்தகத்தின் ஒரு சில பகுதிகளை கிழித்தும் ஜன்னல் வழியாக தூக்கி எரிந்தனர். இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பீகாரில் பள்ளி தேர்வுகள் எப்படி நடப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது என பல கேள்விகளை எழுப்பியது. இதனால் இந்த வருடம் 10-ம் பொதுத்தேர்வு நடைபெறும் போது பிட் அடிக்கும் மாணவர்களுக்கு ரூ20 ஆயிரம் அபராதமும், உதவி செய்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் பீகார் பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

மேலும் காப்பியடித்தால் மூன்று வருடங்களுக்கு தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் பீகார் பள்ளி கல்வித்துறை தலைவர் லால்கேஷ்வார் பிரசாத் சிங் எச்சரித்துள்ளார். மேலும் தேர்வு நடக்கும் அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.