சிறுவனின் எழுத்துப்பிழைக் கூட தீவிரவாதி என்று சந்தேகப்பட வைத்துள்ளது

shutterstock_95710594-390x285

தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தான் வருகின்றது.  முஸ்லீம் பெண்கள் அணியும் முகமூடிக்கு கூட அங்கே கட்டுப்பாடு இருக்கின்றது.  ஒரு பள்ளிமாணவன் செய்த எழுத்துப்பிழையால் குடும்பத்தையே சந்தேகப்பட வைத்துள்ளது.

பாடப் புத்தக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்கில பாடப் புத்தகத்தில், ‘நீ எங்க வசிக்கிறாய்?’ என்ற கேள்விக்கு terraced house (மாடிவீடு) என்பதற்கு பதிலாக terrorist house (தீவிரவாதி வீடு) என்று எழுதியதால் இந்தப் பிரச்சினை உருவானது.

இங்கிலாந்தின் வடகிழக்கைச் சேர்ந்த அந்த முஸ்லிம் மாணவர் லான்க் ஷ்யிரில் குடும்பத்தோடு வசிக்கிறார். பாடப் புத்தகத்தில் சிறுவன் எழுதி இருந்த பதிலை கண்ட பள்ளி ஆசிரியை உடனடியாக சிறுவனை விசாரிக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதோடு அல்லாமல், அவரது வீட்டில் முழு சோதனையிலும் ஈடுபட்டனர். பெற்றோரின் லேப்டாப் கைப்பற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர்களது வீட்டில் சந்தேகத்துக்கிடமான எந்த அம்சமும் இடம் பெறவில்லை. இறுதியில் மாணவர் செய்த எழுத்துப் பிழையை ஆசிரியை தவறாக புரிந்துகொண்டதாகவும், இதில் நடவடிக்கைக்கு வேலையில்லை என்றும் லான்கஷயிர் போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.