சாப்பிட்டதும் தூக்கமா?

sleepy man

ரொம்ப பேருக்கு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருக்கிறது.  என்னதான் பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் ஆரோக்கியமானது என்றாலும் பகல் நேரத்தில் உணவு சாப்பிட்டதும் தூங்கினாலோ அல்லது இரவில் தாமதமாக தூங்குவதற்று முன் சாப்பிட்டோலோ பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். உண்மையிலேயே உணவு சாப்பிட்டதும் தூங்கினால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது.  உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்று, உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கினால் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக் கூடும்.  இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க.  சரி. இப்போது உணவு சாப்பிட்டதும் ஏன் தூங்கக் கூடாது என்பதற்கான காரணங்களும்,அப்படித் தூங்கினால் என்ன பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று பார்ப்போம்.

உணவு உட்கொண்டதும் தூங்குவதால் எதிர்நோக்கும் பிரச்சனைகள்.

  1. உடல் பருமன்

உணவு சாப்பிட்ட உடனேயே உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணம், மற்ற நேரங்களில் எடுக்கும் கலோரிகளை விட, தூங்கும் முன் கலோரிகள் நிறைந்த உணவை சாப்பிடுவதால், அவை உடல் பருமனை சீக்கிரம் அதிகரித்து விடுகிறது.

  1. நெஞ்செரித்தல்

உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கினால் நெஞ்செரிச்சலால் துன்பப்படக்கூடும்.  உணவு சாப்பிட்ட பின் தூங்கும் பொழுது, உணவுக் குழாய் வழியாக இரைப்பையில் உள்ள அமிலமானது மேலே ஏறி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.

  1. ஆஸ்துமா

ஆஸ்துமா  பிரச்சனை உள்ளவர்கள், உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கினால், இரைப்பை உணவுக் குழாய்க்குரிய எதிர்வினை அறிகுறிகளான மூச்சுத் திணறல் மற்றும் இருமல் போன்றவை ஏற்படுவது அமெரிக்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  எனவே உணவை சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

  1. பக்கவாதம்

உணவு சாப்பிட்டதும் தூங்கச் சென்றால், பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகரிப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.  மேலும் இந்த ஆய்வில் ஏற்கனவே பக்கவாதம் வந்த 250 பேரையும், தீவிர இதய குழவிய நோய் கொண்ட 250 பேரையும் கொண்டு சோதிக்கப்பட்டது.  இதில் உணவு உண்டதற்கும், தூங்குவதற்கும் இடையே நிறைய இடைவெளி விட்டவர்களுக்கு பக்கவாத தாக்கத்தின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

  1. தூக்கமின்மை

குறிப்பாக இரவில் சாப்பிட்டவுடன் தூங்கச் சென்றால், தூக்கமின்மைக்கு ஆளாக நேரிடும்.  அதிலும் மது அருந்தினாலோ அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது.  அதேபோல் இரவில் சாப்பிடாமல் தூங்கினாலும், தூக்கமின்மை ஏற்படும்.  எனவே இரவில் தூங்கப் போவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவு சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.