சிங்கத்திடம் இருந்து மயிரிழையில் தப்பித்த மனிதர்

man-vs-lion

தவான் நாட்டில் தைபேயில் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர் மரணவாசலில் இருந்து மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது.

தைவான் நாட்டின் தைபேயி உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துவிட்டார். அவரை வேட்டையாடுவதற்கான முயற்சியில் சிங்கங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

பாவம் மனநலம் பாதித்தவரால் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமலேயே இருக்கின்றார்.  இந்த பிரச்சினையை பார்த்த பூங்கா ஊழியர்கள் மற்றும் மக்கள் தண்ணீரை பீய்த்து சிங்கத்தின் மீது அடிக்கின்றனர்.  சிங்கம் பயந்து ஓடியதும், ஊழியர்கள் மனநலம் பாதித்த அந்த மனிதரை காப்பாற்றி வெளியே கூட்டிக்கொண்டு வருகின்றனர்.  இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால் போதும் சிங்கங்கள் வேட்டையாடி தின்றிருக்கும்.

https://youtu.be/H7Hdi9RVmzI

Leave a Reply

Your email address will not be published.