சென்னை சூப்பர் கிங்க்ஸ் இந்த IPL மேட்சில் விளையாடுமா?

images (4)

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை அணி பங்கேற்க 2 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது, சில வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் விசாரணை கமிட்டியை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி, அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் மற்றொரு குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த குழு, கடந்த ஜூலை 14-ந்தேதி தீர்ப்பளித்தது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி மற்றும் சென்னை அணி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,  மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி  மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும் எனவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என தெரிவித்துள்ளார். மேலும், சென்னை அணியை முடக்கியதில் லலித் மோடி, தாவூத் இப்ராகீம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.