புகைப்பிடிப்பவர்களை திருத்தும் நிகோடின் அதன் அடிமையாக்கிவிடுகின்றது

nicotine_05

புகைப்பிடிப்பவர்களை திருத்த முடியாமல் திருந்தவும் முடியாமல் கவலைப்படுபவர்கள் நிகோடின் ஸ்விங்கத்தை மெல்லுவர்.   இந்த ஸ்விங்கம் உடலில் நிகோடின் அளவை கட்டுப்படுத்தும். புகைப்பிடிப்பதால் இந்த நிகோடின் அதிகமாகிவிடும்.  திடீரென்று நிகோடின் தடைபடும் போது, மீண்டும் மீண்டும் புகைப்பிடிக்க வைத்துவிடும்.  இதற்காகத்தான் இந்த ஸ்விங்கத்தை மெல்லுவர்.

இந்த ஸ்விங்கம் புகைப்பிடிப்பவர்களை திருத்தும் என்பது உண்மைதான்.  ஆனால் இது புகைப்பிடிப்பவர்களை தனக்கு அடிமையாக்கிவிடுகின்றது.  இதில் சிகரெட்டில் உள்ள புகை மட்டும் தான் இல்லை.  ஆனால் சிகரெட்டின் எல்லா தீமைகளும் உள்ளது.  இந்த நிகோடின் அளவு அதிகரித்தால் உடலில் வாந்தி, பேதி வரும்.

முடி உதிர ஆரம்பிக்கும், உடல் வெப்பமாகும், சுவாசித்தல் கடினம், நரம்பு மண்டலம் பாதிப்பு போன்ற பல பிரச்சினைகளை இந்த ஸ்விங்கம் கொண்டுவந்துவிடும்.  பின்னர் இது நிகோடினுக்கு நம்மை அடிமையாக்கிவிடும்.

இதனால் புகைப்பிடிப்பதை நிறுத்த இதை தவிர வேறு எதுவும் இல்லை என்று எண்ணாமல் மனதளவில் கட்டுப்பாட்டுடன் சிறிது சிறிதாக நிறுத்திவிடுங்கள்.  உங்கள் வாழ்க்கை உங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

Leave a Reply

Your email address will not be published.