காரம் சேர்ப்பது உடலுக்கு நல்லதா?

images (3)

காரம் என்றாலே எல்லாருக்கும் ஒரு ஆசைதான், அது நூடுல்ஸாக இருந்தாலும் சரி, பானி பூரியாக இருந்தாலும் சரி, அல்லது சட்டினியாக இருந்தாலும் சரி எல்லாம் நல்ல ருசியாகத்தான் இருக்கும். சொல்லும்போதே அடி நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். ஆனால் காரத்தை பெற மிளகாய்த்தூள் பயன்படுத்தக்கூடாது.

பச்சை மிளகாய், மிளகுத்தூள், கடுகு போன்றவைகளிடமிருந்து காரத்தை பெற வேண்டும். காரத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளது.  காரம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கின்றது.  அமிலத்தன்மையை சமன்செய்கின்றது.  இந்த காரம் உடலில் சேர்ந்தவுடன் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன.  இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

குறைந்த இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காரம் சேர்த்துக்கொண்டால், இந்த காரம் இரத்தக்குழாயில் சென்று இரத்தக்குழாயை விரிவடையச்செய்கின்றன.  இரத்தக்குழாய் விரிவடைந்த பின்னர் இரத்தம் ஒட்டம் அதிகரிக்கும்.

இதயக்குழாயில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடுகின்றது.  இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகின்றன.  செரிமானப்பிரச்சினைகள் சரியாகிவிடும்.  இந்த காரம் கொழுப்பை குறைப்பதால் உடல் இளைத்துவிடும்.

தினமும் காலையில் பழைய சாதத்துடன், 5 பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் போதும், நம் உடலில் மிகவும் நல்ல முறையில் காரம் அதிகரித்துவிடும்.  மேலும் மிளகாயை நேரிடையாக சேர்த்துக்கொண்டால் வயிற்றில் புண்கள் மற்றும் ஆசனவாய் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க, பழைய சாதம், கஞ்சி சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் பக்க உணவாக மிளகாயை கடித்துக்கொள்ளவேண்டும்.

அளவுக்கு மீறினால் அமுதம் கூட நஞ்சு தான்.  அதனால் தினமும் மிளகாயை சிறிது உடலில் சேர்த்துக்கொள்ளுவதோடு விட்டுவிடுங்கள்.  காரசாரமான உணவுகளுக்கு இறங்கிவிடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.