ஜப்பானியர்களின் ஒல்லி ரகசியம்

japanese

உலகத்திலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் தொப்பையின்றி, பிட்டாக இருக்கிறார்கள்.  மற்றும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்கள் தான்.  இவர்கள் எப்பொழுதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.  இதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறை மற்றும் டயட் தான் காரணம்.  உடல் எடையைக் குறைக்க இந்திய உணவுகள் மிகச் சிறப்பான முறையில் உதவுகின்றன.  அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவைத் தான் உண்பார்கள்.  ஆனால் நம் நாட்டில் தற்போது ஜங்க் மற்றும் பாஸ்ட் உணவுகளின் மீது அதிகம் கவனம் செலுத்தி நம் பாரம்பரிய உணவை மறந்து விட்டோம்.  இதனால் தான் நம் நாட்ழல் பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்ற்னர்.  7 நாட்களில் 7 கிலோ குறைய வேண்டுமா,  இதோ சில அட்டகாசமான டயட் டிப்ஸ்….சரி.  இப்போது ஜப்பானிய மக்களின் பிட்னஸ் மற்றும் அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதன் இரகசியத்தைக் காணலாம்.

ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் இரகசியம்.

  1. மீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள்

ஜப்பானியர்கள் பெரும்பாலும் உணவை வீட்டிலேயெ சமைத்துத்தான் சாப்பிடுவார்கள்.  அளவான சாதம், க்ரில் மீன், ஒரு பௌல் மிசோ சூப், பழங்கள் மற்றும் க்ரீன் டீ போன்றவை ஜப்பானியர்களின் பாரம்பரிய உணவுகளாகும்.  மற்றும் ஜப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது மிகவும் அரிது.

  1. மிதமான தீயில் சமையல்.

ஜப்பானியர்கள் சமைக்கும் பொழுது மிதமான நெருப்பில் தான் உணவைச் சமைப்பார்கள்.  இதனால் உணவுப் பொருட்களில் ஊட்டச் சத்துக்களின் அளவு குறையாமல் அப்படியே கிடைக்கும்.  ஜப்பானியர்கள் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களான ஆலிவ் ஆயிலைத் தான் சமையலில் உபயோகப்படுத்துவார்கள்.

  1. அளவான உணவு மற்றும் பரிமாறும் விதம்

ஜப்பானிய ஹோட்டல்களுக்குச் சென்றால், அங்கு அவர்கள் சிறிய பௌலில் உணவைக் கொடுப்பதோடு, அந்த அளவான உணவிலேயே வயிறு ரொம்பி விடும்.  இதற்கு அவர்கள் உணவை அலங்காரம் செய்து பரிமாறுவதுதான்.  மற்றும் ஜப்பானியர்கள் உணவை மெதுவாகத் தான் சாப்பிடுவார்கள்.  இதனால் செரிமான மண்டலம் அளவாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு பிட்டாக இருக்க உதவுகிறது.

  1. காலை உணவு அவசியம்.

ஜப்பானில் காலை உணவுதான் மிகவும் முக்கியமானது.  காலை வேளையில் தான் பல வகையான உணவுகள் பரிமாறப்படும்.  முக்கியமாக மிசோ சூப்பை காலை வேளையில் கண்டிப்பாக சாப்பிடுவார்கள்.  ஏனென்றால் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரோபயோடிக்ஸ் அதிகம் உள்ளது.

  1. டயட் என்பதே இல்லை.

ஜப்பானிய பெண்கள் டயட் என்பதையே மேற்கொள்ளமாட்டார்கள்.  இவர்கள் அனைத்து வகையான உணவையும் பயமின்றி  வாங்கி சாப்பிடுவார்கள்.  அதே சமயம் அவர்கள் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் நடந்தேதான் செல்வார்கள்.  இது தான் அவர்களின் ஸ்லிம்மான உடலுக்கு காரணமும் கூட.

  1. பிரட் சாப்பிடமாட்டார்கள்

ஜப்பானிய உணவில் சாதத்தை தவிர பிரட் போன்ற எதுவும் இருக்காது.  பிரட் என்பது சுத்திகரிக்கப்பட்ட மாவின் மூலம் செய்யப்படுவதால், அதைனைச் சாப்பிடும் பொழுது பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும் இதில் நார்ச்சத்து தரமற்றதாக இருக்கும்

  1. காய்கறிகள்.

ஜப்பானியர்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவார்கள்.  இதனால் அதில் உள்ள கனிமச் சத்துக்கள், ஆண்டி-ஆக்ஸிடென்ட், மற்றும் வைட்டமின்கள் போன்றவை உடலுக்குக் கிடைக்கிறது.  இதனால் இவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.  ஜப்பானியர்கள் பெரும்பாலும் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, கேல், முளைக்கட்டிய பயிர்கள் போன்றவற்றைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்.

  1. கடற்பாசி.

ஜப்பானியர்கள் கடற்பாசியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள்.  கடற்பாசியில் கனிமச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன.  இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான ஜப்பானிய உணவுகளில் கடற்பாசி இருக்கும்.

  1. ஆரோக்கியமான நூடுல்ஸ்

ஜப்பான் நூடுல்ஸில் கொழுப்பு குறைவாக உள்ளது.  இந்த நூடுல்ஸ் பல வகைகளில் கிடைக்கிறது.  இந்த நூடுல்ஸானது பக்வீட் மற்றும் பீன்ஸ் கொண்டு செய்யப்படுபவை என்பதால் இதுவும் ஜப்பானியர்களின் பிட்டான உடலுக்கான இரகசியமாகும்.

  1. சோயா பீன்ஸ் மற்றும் க்ரீன் டீ

ஜப்பானியர்கள் சோயாவைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள்.  அன்றாடம் 50 கிராம் சோயாவை பல உணவுகளில் சேர்த்து உபயோகப்படுத்துகிறார்கள்.  அது மட்டுமில்லாமல், உணவிற்குப்பின் ஒரு கப் க்ரீன் டீ குடிக்கிறார்கள்.  இதனால் அவர்களுடைய இதயம் பாதுகாக்கப்படுகிறது.  அதிக நாட்கள் ஆரோக்கியத்துடனும் இளமையுடனும் வாழ்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.