இணையதளத்தில் 35 வினாடிகள் காத்திருந்தால்தான் டிக்கட் வாங்க முடியும்

New Alternative ticket confirmation to Waiting List Passengers, by IRCTC

இந்தியாவில் கோடிக் கோடியாக சம்பாதிக்கும் ஒரே இணையதளம் IRCTC தான் தெரியுமா. இதைப் பயன்படுத்தி தட்கலிலும், முன்பதிவிலும் மக்கள் நிறைய பேர் தங்கள் டிக்கட்களை வாங்கிக்கொள்கின்றனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவில், தொழில்நுட்ப மோசடிகளை தவிர்க்க, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 35 வினாடிகள் கட்டாயம் காத்திருந்தே டிக்கெட் பெற வேண்டும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தையே பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பலரும் அந்த இணையதளத்தை நாடுவதால், சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, ‘தட்கல்’ எனப்படும், அடுத்த நாள் பயணத்திற்காக, முந்தைய நாளில் டிக்கெட் எடுக்கும் போது, இந்த நிலை ஏற்படுகிறது.இதை தவிர்க்க, சிலர், அந்த இணையதளத்தின் கட்டமைப்பில் சில வசதிகளை முறைகேடாக பயன்படுத்தி, ஒரு சில வினாடிகளில் டிக்கெட் எடுத்து விடுகின்றனர்.

குறிப்பாக, இணையதள தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், டிராவல் முகவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதை அறிந்த, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், டிக்கெட் எடுக்க வேண்டுமானால், குறைந்தபட்சம், 35 வினாடிகள் அந்த இணையதளத்தில் காத்திருப்பது அவசியம்; அத்தகையவர்களுக்கு மட்டும் தான் டிக்கெட் கிடைக்கும்; பிறருக்கு டிக்கெட் கிடைக்காத வகையில், சாப்ட்வேரில் மாற்றத்தை செய்துள்ளது.

இதில், 35 வினாடிகள் ஏன் என, அந்த இணையதள நிர்வாகிகள் கூறும் போது, ‘டிக்கெட் முன்பதிவுக்கான பக்கத்தில் உள்ள விவரங்களை நிரப்ப, 35 வினாடிகள் போதும் என்பதால், அந்த நேரம் வரை காத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிமேல், மோசடியாக, சில வினாடிகளில் டிக்கெட் எடுப்பது தடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.