உடல் எடையை குறைக்க உதவும் வெண்பூசணி சாறு

images

சாம்பல் நிறத்தில் நன்றாக பருத்து காணப்படும் இந்த வெண்பூசணி, இது சாம்பல் பூசணி என்றும் அழைக்கப்படும்.  காய்கறிகளில் வெண்பூசணி தான் பெரிய காய்கறியாகும்.  ஆனால் இதை சாப்பிட்டால் நாம் எவ்வளவு பெரிய உடம்பை வைத்திருந்தாலும் உடல் இளைத்துவிடும்.  இந்த வெண்பூசணி சாற்றில் அவ்வளவு நற்குணம் உள்ளது.

வெண்பூசணியை கீற்றாக அரிந்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எடுக்கவேண்டும்.  இந்த சாற்றில் சிறிது உப்பு அல்லது தேன் கலந்து தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் குடித்து வர நம் உடல் நிறைய பலன்களை அனுபவிக்கும்.

வேலையாலும், நேரமின்மையாலும் அதிக நேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் வயிற்றில் புண்கள் உருவாகி அல்சரை உருவாக்கும்.  இந்த அல்சரை தீர்க்க நாம் நிறைய வைத்தியங்களையும், கை வைத்தியங்களையும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.   ஆனாலும் சரியான பாடில்லை.

இதற்கு வெண்பூசணி சாறுதான் தீர்க்கும் மருந்து.   இந்த வெண்பூசணி சாற்றை  தினமும்  பருகி வந்தால் போதும் வயிற்றுப்புண்கள் தீர்ந்துவிடும்.  உடலில் உள்ள வெப்பத்தை போக்கும். சிறுநீர்ப்பிரச்சினைகளை அகற்றிவிடும்.  கற்களைக் கரைக்க உதவும்.  தினமும் அதை சாப்பிட்டுக்கொண்டே வந்தால் இரத்தம் சுத்தமாகும்.  இவ்வளவு நற்குணங்கள் அடங்கியுள்ள பூசணியை இனிமேல் தவிர்த்துவிடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.