சோடா குடிப்பதால் ஏற்படும் உபாதைகள்

diet soda

டயட் சோடா குடிப்பது என்பது நல்ல யோசனையாக தோன்றலாம்.  ஆனால் அதில் அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்ரீன் கலந்துள்ளது.  உணவுக் கட்டுப்பாடு ஆராய்ச்சியில் நெருங்காலமாக சோடா குடிப்பவர்களைப் பற்றி வேறுவிதமாகச் சொல்கின்றனர்.  ஏனென்றால் டயட் சோடா குடிப்பதால் கணக்கற்ற ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.  இங்கு நீங்கள் டயட் சோடா குடிப்பதை நிறுத்துவதற்கான ஆறு காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டயட் சோடா குடிப்பதை ஏன் நிறுத்த வேண்டும்?

  1. உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.

இனிப்பூட்டப்பட்ட பானங்கள் செயற்கைமுறையில் தயாரிக்கப்படுகின்றன.  இது அதிக அளவு இனிப்பு சுவையைக் கொண்டிருக்கிறது.   உணர்வுகளை சோர்வடையச் செய்கிறது.  அத்துடன் அதிக அளவு இன்சுலினைத் தூண்டச் செய்கிறது.  இதனால் உடலில் உள்ள கொழுப்பை சேமிக்க வைக்கிறது.  இது உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.  சோடா குடிப்பவர்கள் அதிக அளவில் குடிக்க முயற்சிக்கிறார்கள்.  இது மேலும் உடல் எடையை கூட்ட வழி வுகுக்கிறது.

  1. மன அழுத்தத்தை உண்டாக்கும்.

அமெரிக்க அகாடமி ஆப் நியூராலஜி வழங்கிய ஆய்வின்படி, டயட் சோடா சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும் போது, பத்து வருடங்களுக்கு மேல் தினசரி அடிப்படையில் 4 அல்லது அதற்று மேற்பட்ட டயட் சோடா குடித்தவர்களில் 30 சதவிகிதம் பேர் மன அழுத்தம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இனிப்பான பானங்களை சாப்பிடும் போதும் இந்த நிலை உள்ளது.  ஆனால் டயட் சோடாக்களுடன் ஒப்பிடும் போது இதில் ஆபத்து குறைவு.

  1. அஸ்பார்டேம் தொடர்பான சுகாதாரப் பிரச்சனைகள்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பெறும் புகார்களில் 75 சதவிகித புகார்கள் செயற்கை இனிப்பூட்டி அஸ்பார்டேம் குறித்ததாகும்.  மற்ற வேதியல் சார்ந்த இனிப்பூட்டிகளில் இருக்கும் ஆபத்தைவிட அஸ்பார்டேம் மிகவும் ஆபத்தானதாகும்.  90 அறிகுறிகள் கொண்ட நடுநடுங்க வைக்கும் ஒருபட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.  இங்கு சிறிய மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவையாவன பார்வை பிரச்சினைகள், மைக்ரைன், தெளிவற்றபேச்சு, வலிப்பு, கவலை, நினைவாற்றல், இழப்பு, தசைபிடிப்பு, தூக்கமின்மை, மற்றும் மூட்டுவலி.

  1. புன்னகையை அழிக்கும்.

டயட் சோடாவில் உள்ள காப்பனேற்றம் மற்றும் இரசாயனங்களால் ஏற்படும் அமில விளைவால் உங்கள் சந்தோஷத்தை, சிரிப்பை அழிக்க முடீயும்.  தீவிர கோகோயின் மற்றும் மெத் பயனர்கள் பதிவிட்ட பல் சேதத்திற்கு இணையான அளவு சோடா சாப்பிடுபவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  1. டைப் 2 சர்க்கரை நோயை அதிகரிக்கச் செய்யும்.

மினசோட்டா பல்கலைக் கழக ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஒரு கேன் டயட் சோடா என்ற அடிப்படையில் குடித்து வரும் போது. டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் இடர்பாடு 36 சதவீதமாக உள்ளது.  இதனோடு சேர்த்து அதிகரிக்கும் குளுகோஸ், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு பெருக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

  1. இதயப் பிரச்சினைகளை அதிகரிக்கின்றது

ஒரு நாளைக்கு ஒரு டயட் சோடா என்ற அடீப்படையில் எடுத்துக் கொள்வது பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இரத்த நாளங்களில் மரணம் ஆகியவற்றை உண்டாக்கும் ஆபத்தை 43 சதவீதம் கொண்டு்ள்ளதாக மியாமி, கொலம்பியா பல்கலைக்குழக ஆய்வுகள் அறிவிக்கின்றன.  ஆகவே கலோரிகளை குறைப்பது என வரும் போது முடிந்தவரை இயற்கையாக இருக்க முயற்சி செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.