மலேசியாவின் டத்தோ விருதை வென்ற தமிழர்

e8f1fc04-ef6b-4a4c-926b-e90c197aa6dc_S_secvpf

மலேசிய அரசின் கவுரவமிக்க டத்தோ விருதிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாக கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப் (35). இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்குகின்றனர். இந்த விருதானது கடந்த 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. மலேசியர்களுக்கு மட்டுமே அளிக்கக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான டத்தோ விருதுகள் பெறும் 12 பேரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது யூசுப்பும் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.