இனி, இலவசமாகவே கிடைக்கும் வாட்ஸ்அப் அப்ளிகேஷன்ஸ்

Whatsapp-Status

கடந்த 2014 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருட இலவச பயன்பாட்டுக்கு பிறகு, சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் உலகம் முழுக்க வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பயன்படுத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இதனையடுத்து, இனி வரும் காலத்தில், ஆண்டு சந்தா இன்றி, இலவசமாக பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.