வழுக்கையிலும் முடி வளர புடலங்காய்

பெரிய பாம்பைப்போன்று நீண்டு வளரக்கூடிய புடலங்காய். இது கொடி வகை தாவரமாகும். இந்த கொடியில் புடலங்காய்கள் வளர்கின்றது. சமையலுக்கு குழம்பாகவும், கூட்டு வைக்கவும் பயன்படுத்துவர். இதில் அதிக நீர்ச்சத்துள்ளது. இந்த காய்கறியின் மருத்துவகுணங்களை பற்றிப்பார்ப்போம்.
புடலங்காயை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிறுநீரகப்பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த காயை சமைத்து சாப்பிட்டால் இந்நோய்களில் இருந்து வெளிவந்துவிடலாம். மேலும் வயிற்றுப்பூச்சிகளை அகற்றவும் புடலங்காய் உதவுகின்றது.
புடலங்காய் ஒரு வாரம் முழுக்க சமைத்துச்சாப்பிட்டாலோ அல்லது கூட்டு வைத்து சாப்பிட்டாலோ உடல் இளைத்துவிடும். உடலில் உள்ள கெட்ட நீரையும் கொழுப்பையும் விடாப்பிடியாக புடலங்காய் வெளியேற்ற உதவும்.
தீராத காய்ச்சல் இருந்தால் புடலங்காயை சமைத்து கொடுக்கவும். காய்ச்சல் விட்டுப்போகும். இதயப்பிரச்சினைகள், மாரடைப்பு, அதிக களைப்படைதல் போன்ற எதுவாகினும். இந்த புடலங்காயை சமைத்து சாப்பிட்டால் சரியாகிவிடும். புடலங்காய்கள் மட்டுமல்ல புடலைக்கொடியின் பச்சை இலைகளை பறித்து சாறாக்கி அதை தினமும் ஒரு டீ-ஸ்பூன் வீதம் அருந்தி வந்தால் போதும் இரத்தம் சுத்தமாக்கப்படும்.
இந்த புடலையிலையை நன்றாக கசக்கியோ அல்லது அரைத்த வெளிப்படும் சாற்றை மண்டையில் தேய்த்து வர, மயிர்க்கால்கள் அனைத்தும் பலம்பெற்ற மீண்டும் வளர ஆரம்பிக்கும். வழுக்கையிலும் முடி முளைக்கும்.
இருபது வயதிலேயே ஏற்படும் வழுக்கைக்கு காரணம் புழுவெட்டு மற்றும் போதுமான ஊட்டச்சத்துக்கள் முடிக்கு செல்லாதது தான் காரணம். இந்த பிரச்சினை நீங்க இது மட்டும் தான் சரியான வழி, புடலங்கொடியின் பச்சை இலைகளை பறித்து சாறுபிழிந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 25 மிலி குடித்து வர வேண்டும். இதனால் உடலில் சத்துக்கள் அதிகரித்து கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு முடி வளர ஆரம்பமாகும்.
Leave a Reply