சொத்துக்கு ஆசைப்பட்டு பாட்டியின் மீது அம்மியைப் போட்டுக்கொன்ற பேரன்

download (3)

மொடக்குறிச்சி தாலுகா, ஆவாரங்காட்டு வலசு அடுத்த லோகியா வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள், 85. இவரது மகள் பருவதம், 57 கணவனுடன் வெப்பிலியில் வசித்து வருகிறார். பருவதத்தின் பேரன் வகை உறவினர் சேகர், 35, நத்தக்கடையூரில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சேகருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

கடந்த ஜன., 8ம் தேதி இரவு, சின்னம்மாள் வீட்டிற்கு சென்ற சேகர், ஈஞ்சம்பள்ளி பருவதம்மாள் வீட்டருகே உள்ள வீட்டு நிலத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு பாட்டியிடம் கேட்டுள்ளார். இதனால், பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. மதுபோதையில் இருந்த சேகர், அருகில் இருந்த அம்மி கல்லை எடுத்து பாட்டி சின்னம்மாள் தலையில் போட்டார். சின்னம்மாள் மயக்கமடைந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையறிந்த உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சின்னம்மாளை சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் நேற்று பலியானார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார், சேகரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.