ஆர்யா ஸ்லிம் கட்டுரைகள்

arya

 

பொதுவாக திரைப்பட நடிகர்கள் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இருப்பார்கள்.  ஆனால் திரைப்பட நடிகைகளின் கனவுக் கண்ணனாக வலம் வருகிறார் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா.  இவரை டார்லிங் என்று அழைக்காத நடிகைகளும் இல்லை என்ற பேச்சு கோலிவுட்டில் வெட்ட வெளிச்சமாகவே அடிபடுகிறது.  தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஷ் இரகசியம்.  சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம்.  ஆர்யா  அப்படி என்ன உடல் எடை மெலிந்து, ஸ்லிம்மாக இரகசியம் வைத்திருக்கிறர்ர்.  இந்தக் கேள்வி பலரது மனத்திலும் நிறையவே இருக்கிறது.  ஆனா நடிகர் ஆா்யா கூறிய ஸ்லிம்மாகும் இரகசியம். அவரது நெருங்கிய நண்பருக்கு.  அவரும் அதைக் கடைப்படித்து ஸ்லிம்மாகி விட்டார் என்பதுதான் ஆச்சரியம்.  குட்டி குஷ்பு ஹன்சிகாவின் ஃபிட்னஸ் இரகசியம்.  யார் அந்த நண்பர்.?  ஆர்யா கூறிய ஸ்லிம் டீப்ஸ் இரகசியம் தான் என்ன?  தொடர்ந்து படியுங்கள்.  இது தாங்க கூர்யாவின் ஃபிட்னஸ் இரகசியம்.  நடிகர் ஆர்யா கூறிய ஸ்லிம்மாவதற்கான இரகசியம்.

ஆர்யாவிடம் அறிவுரை கேட்ட நண்பர்.

பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவுடன் ஒன்று சேர்ந்து தூள் கிளப்பிய அந்த நண்பர் சந்தானம் தான்.  ஆர்யாவிடம் ஸ்லிம்மாக அறிவுரை கேட்ட ரியல் லைப் நண்பரும் அவரே.

ஆர்யா கூறிய இரகசிய டீ

சந்தானம் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக ஆவது எப்படி என்று கேட்கிறார்.  நடிகர் ஆர்யாவிடம், அதற்கு ஆர்யா, என்னுடன் வா, நான் ஒரு டீ வாங்கித் தருகிறேன்.   நீ அதைக் குடி.  உன்னுடைய உடல் எடை விரைவாக குறைந்து ஸ்லிம் ஆகி விடலாம் என்று கூறுகிறார்.

சைக்கிள் பயணம்

ஆர்யா சொன்னது மட்டுமின்றி, மறுநாள் காலையே ஓர் சைக்கிள் எடுத்துக் கொண்டு சந்தானத்தின் வீட்டிற்கு சென்றார்.  வா, கிளம்பு என்று கூறி, சந்தானத்தை சைக்கிள் ஓட்டச் சொல்லுகிறார்.   பின் இருக்கையில் அமர்ந்து சென்றிருக்கிறார் ஆர்யா.

மகாபலிபுரத்து பயணம்

மகாபலிபுரத்தில் இருக்கும் ஓர் சாலையோர கடையில் தான் விற்கப்படுகிறது அந்த ஸ்பெஷல் டீ என்று தினமும் இதே மாதிரி கூட்டிச் சென்று, அந்த சாலையோரக் கடையில் சந்தானத்திற்கு டீ வாங்கித் தந்திருக்கிறார் ஆர்யா

ஸ்பெஷல் டீயின் மகிமை

இப்படியே சில நாட்கள் தொடர்ந்து அந்த ஸ்பெஷல் டீ யை சைக்கிளில் சென்று பருகி வர சந்தானத்தின் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிந்ததாம்.

ஆர்யாவின் கிண்டல்

ஒரு நாள் சந்தானம், ஆர்யாவை அழைத்து அப்படி என்ன மச்சான் அந்த ” டீ ” யில மகத்துவம் இருக்கு? என்று கேட்கிறார்.  அதற்கு ஆர்யா பதிலளிக்கையில் அந்த ”டீ”யில இல்ல மச்சான் மகத்துவம்.  தினமும் நீ சைக்கிளை மிதிச்சு சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரைக்கும் போயிட்டு வரது தான் மகத்துவம் என்று கிண்டலாக கூறுகிறார் நடிகர் ஆர்யா.

ஆர்யாவின் ஸ்லிம் இரகசியம் இது தானுங்கோ!!!

இப்படி தினமும் சைக்கிளை மிதித்தால் உடம்பு தானாக ஸ்லிம்மாகி விடும்.  இதுதான் விரைவாக உடல் எடை மெலிந்து ஸ்லிம்மாக எனது இரகசியம் என்று கூறுகிறார்  நடிகர் ஆர்யா.  வெளிநாட்டிற்குச் சென்று சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றதன் விளைவு தான் ஆர்யாவை இப்படியெல்லாம் பேச வைக்கிறது போல.  மற்றபடி ஆர்யா கூறியபடியே தினமும் சைக்கிள் ஓட்டினால் உடல் எடையில் உண்மையாகவே நல்ல மாறுதலை நாம் காண முடியும்.

Leave a Reply

Your email address will not be published.