பாடிபில்டிங் உணவுகள்

download (2)

பாடிபில்டிங் என்று கூட சொல்ல வேண்டாம், அதெல்லாம் நம்மவர்களுக்கு அதிகம்தான், உடற்பயிற்சி என்று சொல்லுங்கள்.  உடற்பயிற்சி செய்து உடம்பை கொண்டு வந்தால் தான் அது பாடிபில்டிங் என்று சொல்லவேண்டும்.  அப்படியானால் உடம்பைக்கொண்டு வர உடற்பயிற்சி மட்டும் போதாது.  உடற்பயிற்சியோடு அதற்கு தேவையான உணவுகளையும் உட்கொள்ளவேண்டும்.

பாடிபில்டிங்குக்கு செல்லக்குழந்தையே புரதம் தான்.  இந்த புரோட்டீன் நிறைந்த உணவுகள் உட்கொள்ளும் போது அது உடலுக்கு சென்று, தசைவளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது.  இந்த தசைவளர்ச்சி அதிகமாக அதிகமாக நாம் செய்யும் உடற்பயிற்சி அதை உடற்கட்டுகளாக மாற்றிவிடுகின்றது.

பாடிபில்டர் ஆக வேண்டும் என்ற முடிவெடுத்தால் ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிட வேண்டும்.  மூன்று வேளை உணவுகளை ஆறு வேளையாக பிரித்து சாப்பிடவேண்டும். காலையில் அல்லது பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் புரோட்டின் உணவை கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும்.  உடற்பயிற்சியின் போது இந்த உணவுகள் கரைக்கப்பட்டு நேரடியாக உடலில் கலந்துவிடும்.

தினமும் பழங்கள் நிறைய உட்கொள்ள வேண்டும்.  நம் நாட்டில் வாழைப்பழம் சல்லிசாக கிடைக்கின்றது.  இதை அதிகமாக உட்கொள்ளுங்கள்.  மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டாம். இது நமக்கு இதயவலி, புற்றுநோயை கொண்டுவந்துவிடும். மேலும் துர்நாற்றம் அடிக்க ஆரம்பிக்கும். பிறகு நம் உடலை பார்க்க அருகில் கூட யாரும் வர மாட்டார்கள்.  வாரம் இருமுறை அல்லது ஒரு முறை மீன், மட்டன், சிக்கன் போன்றவைகளை சேர்க்கலாம்.

டயட் என்று பாடிபில்டிங்குக்கு கிடையாது, எதை தின்றாலும் செய்யும் கடின உடற்பயிற்சிகள் கரைத்துவிடும். சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் கவலைப்படாதீர்கள்.  உங்களுக்கு செலவு மிச்சம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.  ஒரு கிலோ மட்டன் வாங்கும் செலவில், அதற்கு இணையான சத்துக்களை உடைய கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, உளுந்து போன்றவற்றை ஒரு மாதத்திற்கு வாங்கிவிடலாம்.

இந்த கொண்டைக்கடலையை தினமும் வேகவைத்தோ அல்லது ஊறவைத்தோ உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.  உடற்பயிற்சியின் முன்னும் பின்னும் தாராளமாக இந்த கொண்டைக்கடலையை சாப்பிடலாம். முளைக்கட்டிய தானியங்களை அதிகமாக சாப்பிடலாம். பேரீச்சைப்பழம், தேன், உலர்திராட்சை  இதெல்லாம் சைவப்பிரியர்களையும் பாடிபில்டர்களாக மாற்றும் உணவுகள் தான்.

எப்படி சாப்பிட்டாலும் அதில் புரோட்டின் மற்றம் உயிர்ச்சத்துக்கள், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து உண்ண ஆரம்பித்தீர்கள் என்றால் போதும்.  இது உடலை வளர்க்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published.