எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க

images (1)

சிலரது கை, கால்களை பார்த்தால் சூம்பிப்போய் இருப்பார்கள்.  அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் அப்படித்தான் இருப்பார்கள்.  நல்ல பலமான அகலாமான எலும்புகள் இருக்காது.  சிறிய விபத்துகளோ, அல்லது விழுந்து விட்டாலோ கை கால்கள் உடைந்துவிடும்.  இவர்களுக்கு சிறு வயது முதல் இருந்தே உள்ள ஊட்டச்சத்துக்குறைபாட்டால் தான் இந்தப்பிரச்சினைகள் வரும்.

எலும்புகள் என்பது கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது.  இதற்கு நாம் கால்சியம் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.  அடர்த்தி அதிகமாக எலும்பை பலமாக்க வேண்டும்.  அதற்கு தானியங்களை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

உளுந்துக்கஞ்சி என்பது எலும்பை பலப்படுத்தவே உருவாக்கப்பட்டது.  இதை தினமும் சாப்பிட்டாலே போதும் எலும்பு நன்றாக பலப்படும். இதை தயார் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கை உளுந்து எடுத்துக்கொள்ளுங்கள் சம பங்கு சாப்பாட்டு அரிசியையும் எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  பின்  மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதில் சர்க்கரை அல்லது வெல்லம், சிறிது சுக்கு ஆகியவற்றை சேர்த்தே அரைக்கவும்.  பின் அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இந்த அரைத்த மாவை ஊற்றி அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.  நன்றாக கொதித்து, கெட்டியாகும் பதத்தில் இறக்கி ஆறவைத்து சாப்பிடவும்.

இந்த உளுத்தங்கஞ்சி உடம்புக்கு ஊக்கத்தை கொடுக்கும், எலும்பு நன்றாக வளரும்.  அடர்த்தியை எலும்புக்கு கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.