உழைத்தப்பின் ஏற்படும் களைப்பை போக்க

clrbm2961

சில பேர்கள் இராப்பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.  இவர்கள் அயர்ந்து உட்கார்வது என்றால், அது களைப்பினாலும் உடல் சோர்வாலும் மட்டும் தான்.  இந்த சோர்வு உடலை மிகவும் வாட்டி வதைத்துவிடும்.  உடல் வலியும் ஏற்பட்டுவிடும். எந்நேரமும் உடல் சோர்வுடன் காணப்பட்டால் கவலை வேண்டாம்.

வேலை முடித்து வந்தவுடன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் ஒரு சொம்பு தண்ணீர் கலந்து விட்டு பின் உப்பும் சர்க்கரையும் தேவையான அளவு கலந்து முழுவதும் குடிக்கவும்.  உடலுக்கு தேவையான குளுக்கோஸ் சக்தி கிடைத்துவிடும்.

உடலில் உழைப்பதற்கு சக்தி வேண்டும்.  கிராமப்பகுதிகளில் உள்ள வயதானவர்கள் கூட கோடாரியை தூக்கி விறகை வெட்டுவர்.  ஆனால் இன்றைய தலைமுறையினர்களால் தண்ணீர் குடத்தை கூட தூக்கி நடக்க முடியவில்லை. உடனே களைப்பு வந்துவிடுகின்றது.  இதற்கு காரணம் சாப்பாடு தான்.  நல்ல இரும்புச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதில்லை.

தினமும் பேரீச்சை, உலர் திராட்சை போன்ற பழங்களை பால் அல்லது நீரில் ஊறவைத்து உண்ண வேண்டும்.  இது எலும்புகளுக்கு உந்து விசையை தரும்.  அன்னாசிப்பழம் அதிகமாக சாப்பிட்டால் உடலில் களைப்பு ஏற்படாது.

தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்து விட வேண்டும்.  நம் உடலுக்கு பலம் கொடுக்க நினைத்தால் எடைப்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.  இது உடலை வலிமை மிக்கதாக மாற்றி விடுகின்றது.  வெங்காயத்தை உணவில் சேர்க்க வேண்டும்.  காலையில் எழுந்தவுடன் நீராகரத்துடன் ஒரு வெங்காயத்தை சாப்பிட்டால் போதும்.  நம் உடலில் பி காம்ப்ளக்ஸ் சத்து கூடிவிடும்.

இதனால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் காலையில் கிடைத்துவிட்டதால் நாள் முழுவதும் உற்சாகம் மற்றும் புத்துணர்வுடன் இருப்பீர்கள்.  சுக்கு மற்றும் இஞ்சி கசாயம், களைப்பாக இருக்கும் போது குடித்தால் உடல் மீண்டும் பலம் பெறும்.

என்ன அருந்தினாலும் மனமும் புத்துணர்வாக இருக்க வேண்டும். கவலைகள் நிறைய இருந்தாலும் வெளியில் காட்டாமல். புன்னகையுடன் வலம் வரவேண்டும்.  யோகா மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மனப்பயிற்சிகள் செய்து வாழவேண்டும்.   இந்த முறைகளை தவறாமல் செய்தால் உடல் சோர்வில் இருந்து தப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.