தலையால் சுவரில் முட்டி தமிழர் கின்னஸ் சாதனை

Tamil_News_large_143310420160114050841

நெல்லையில் தொழிலாளி ஒருவர் சுவற்றில் 5 நிமிடங்களில் 1008 முறை தலையால் முட்டி கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஆம்பூர் கிராமத்தை சேர்ந்தவர், பலவேசம் (வயது 54). இவர் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று உள்ளார்.

இவர் சுவரில் தலையால் முட்டுதல், முழங்கைகளால் சுவரில் குத்துதல் போன்ற பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்த செயலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்காக பலவேசம் ஏற்பாடு செய்தார். இதற்கான நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் தலைமை தாங்கினார். தவோ மருத்துவ பல்கலைக்கழக தலைவர் டேவிட் கே.பிள்ளை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் பலவேசம் அங்கிருந்த சுவரில் தலையால் முட்டியும், கைகளால் குத்தியும் சாதனை முயற்சி மேற்கொண்டார். 5 நிமிடங்களில் 1008 முறை சுவரில் தலையால் முட்டினார். இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பு சார்பில் அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு நிறுவன தலைவர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பதிவு செய்தார்கள். நங்கூரம் ராஜசேகர் இந்த முயற்சியை பாராட்டி பலவேசத்துக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து பலவேசம் கூறுகையில், ‘‘இது பல ஆண்டுகால முயற்சி ஆகும். குத்துச்சண்டை போல் இந்த பயிற்சியை எளிதாக செய்தேன். தொடர்ந்து செய்த பயிற்சியால் இத்தகைய சாதனையை செய்ய முடிகிறது. என்னால் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும், விளையாட்டு துறையினருக்கும் பயிற்சி அளிக்க முடியும்’’ என்றார்.

கின்னஸ் உலக சாதனை அமைப்பு சார்பில் அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு நிறுவன தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தற்போது செய்த முயற்சி முழுவதும் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை மெதுவாக இயக்கி அவர் சுவரில் எத்தனை முறை மோதினார், கைகளால் குத்தினார் என்று எண்ணப்படும். அந்த ஆய்வு முடிவடைந்து 1 வாரத்துக்கு பிறகு முடிவு தெரிவிக்கப்படும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.