கம்ப்யூட்டர் வேலையா அப்போ தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்

download66

நாள் முழுதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களா நீங்கள், அப்படியென்றால் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா?.  கண்ணெரிச்சல், தலைவலி, உடல் சூடு, முதுகுவலி, சிறுநீரகப்பிரச்சினைகள்  மற்றும் மூலம், இன்னும் பல.

கம்ப்யூட்டர் வேலையென்றாலே உட்கார்ந்து தான் செய்ய வேண்டும்.  நாம் அந்த வேலையில் முழ்கியப்பின்பு நமக்கு நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக உட்கார்ந்து இருப்போம். இதனால் நமக்கு கண்கள் பெரிதும் பாதிக்கும்.  உடலில் வெப்பம் அதிகமாவது தான் இதற்கு காரணம்.

கணினி மட்டுமல்ல உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் மேற்சொன்ன பிரச்சினைகள் வந்து விடும். இதற்காக நாம் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். நம் சாப்பாட்டில் ஒரு கப் தினமும் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டியது தான்.  இது நம் உடலுக்கு குளிர்ச்சியை அள்ளித்தருகின்றது.

உடல் பருமன் ஆவது, மட்டும் உடல் வெக்கையை தயிர் போக்குகின்றது.  தினமும் ஒரே ஒரு கப் தயிரை சாப்பாட்டிலோ அல்லது பருகிவிடவோ செய்தால் போதுமானது.  நம் உடல் ஆரோக்கியமடையும்.

இருதய நோய்கள், நெஞ்செரிச்சல், சரியாக செரிமானம் ஆகாதப்பிரச்சினைகள் இப்படி எதுவானாலும் நாம் தயிரை சாப்பிட்டால் சரிசெய்து விடலாம்.  உடலுக்கு குளிர்ச்சி கிடைத்தாலே மற்றது எல்லாம் சரியாகிவிடும். கண்ணெரிச்சல், தலைவலி, எல்லாம் சென்றுவிடும்.

பற்கள் மற்றும் எலும்புகள் தயிரால் வழுவடையும்.  ஆனால் தயிரை மீன்குழம்பு மற்றும் கறிக்குழம்புகளுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள், வெண்புள்ளி ஏற்பட வாய்ப்புண்டு.  மற்றபடி தயிரை தினமும் பருகுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.