தினம் ஒரு செவ்வாழைப்பழம்

வாழை என்றாலே அதன் அனைத்துப்பாகங்களும் உடலுக்கு நன்மை விளைவிப்பவைதான் அதிலும் பழங்கள் மிகவும் சத்துள்ளவை, இந்த வாழைப்பழங்களில் உள்ள பீட்டா கரோட்டீன் தான் இவ்வளவுக்கும் காரணம்.
இந்த வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உண்டு, பூவம்பழம், கற்பூர வள்ளி, ரஸ்தாளி என்று நிறைய வகைகள் உண்டு. இதில் செவ்வாழைதான் அதிக சக்திவாய்ந்தது.
செவ்வாழைப்பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் போதும், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் தானாக கரைந்து வந்துவிடும். இதில் உள்ள சத்துக்கள், உணவு ஜீரணிப்பதை துரிதப்படுத்தும். மேலும் பெண்களுக்கு இடுப்பை பலப்படுத்தும்.
குழந்தைகட்கு இந்த வாழைப்பழத்தை மசித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துவாருங்கள், குழந்தைகள் நல்ல தேக புஷ்டியாக வளர்வார்கள். செவ்வாழைப்பழம் அதிகமாக உட்கொள்ளும் பொது இது, அதிக கலோரிகளை குறைக்கின்றது. ஏனெனில் இது கலோரிகளை குறைவாக கொண்ட பழம்.
பழம் சிவப்பாக இருப்பது போல், அது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் சோம்பலை தவிர்த்து புத்துணர்வாக வைத்துக்கொள்ளும். இரத்தசோகையை துரத்தும்.
தொடர்ந்து ஒரு வாரம் மட்டும் தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பழங்களை தின்றுவாருங்கள். உடலில் உள்ள ஆற்றல் அதிகரித்து ஆளே மாறிவிடுவார்கள்.
Leave a Reply