காதலன் மீது ஆசிட் வீச்சு – காதலி துணிகரம்

Men-Acid-Attack-750x500
உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் எனும் பகுதியில் வசிப்பவர் அப்ரீன் (20). அவர் அதே ஊரைச்சேர்ந்த சுராஜ்(22) என்பவரை காதலித்து வந்தார். சுராஜ், ஹரித்துவாரில் வேலை செய்துவருகிறார்.
இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்ததில் இருந்தே காதலித்து வந்தனர். சுராஜின் காதலை அவரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்பதால, அவர் தனது வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த அப்ரீன்,  தனது காதலனை பழிவாங்க நினைத்துள்ளார். அதன்படி நேராக  சுராஜிடம் சென்று, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரின் முகத்தில் ஊற்றினார். இதில் சுராஜின் முகம் மற்றும் உடல் பகுதிகள் கருகின. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சுராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிசார், அப்ரீனை கைது செய்துள்ளனர்.  உங்களுக்கு மட்டும் தான் ஆசிட் வீசத்தெரியுமா எங்களுக்கும் தெரியும், ஜாக்கிரதை என்று பெண்கள், கிளம்பிவிட்டார்கள்.  பசங்கள் எல்லாம் ”பத்தரம்”ஆக இருங்க.

Leave a Reply

Your email address will not be published.