மாமியாரை அடித்து துவைக்கும் மருமகள்-வீடியோவில் சிக்கினாள் மருமகள்

மாமியார்-மருமகள்-–-எப்போதும்-பிரச்சனைதானா
உத்திரப்பிரதேசத்தில் மீரட்டில் வசித்து வருபவர் சந்தீப் ஜெயின். இவரின் மனைவி சங்கீதா ஜெயின். அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சந்தீப்ஜெயினின் 70 வயதுடைய தாயை, சங்கீதா ஜெயின் அடித்து துன்புறுத்தும் காட்சியும், அவரை கழுத்தை நெருக்கி கொலை செய்ய முயற்சி செய்வதும், அவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.
தன் மனைவிக்கு நடவடிக்கையை தெரிந்து கொள்ளவே, அவருக்கு தெரியாமல், அந்த கேமராவை பொருத்தியிருக்கிறார் சந்தீப் ஜெயின். ஆனால் இப்போதும் தன் மனைவி திருந்தவில்லை என்று வருத்தப்படுகிறார்.  இந்த வீடியோவை சமூக ஆர்வலர் வஸ்தவா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் உத்திரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மாமியாரை தாக்கிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மாமியார் கொடுமையெல்லாம் அந்தக்காலம், இப்போ மருமகள் கொடுமைதான் எங்கும்.

Leave a Reply

Your email address will not be published.