பரங்கிக்காய் விதையை தூக்கி எறியாதீர்கள்

pumpkin

பரங்கிக்காய் ஒரு சிறப்பான காய், இது இயற்கையிலேயே இனிப்புச்சுவை கொண்டது.  இதை கூட்டு செய்யப் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.  நல்ல பெரிதாக உள்ள இந்தக் காயை அரிந்து சமைத்தவுடன், அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவார்கள், ஆனால் இது நல்லதல்ல. இந்த காய்கறியின் விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது.

பரங்கிவிதை சிறியதாக பார்ப்பதற்கு நீள் வட்டமுயைதாக இருக்கும்.  இதன் வெண்ணிற தோலை உரித்தவுடன், உள்ளே பருப்பு இருக்கும்.  இந்த பருப்பு, சற்று சதைப்பற்றுடன் இருக்கும்.  இதில் புரதம் நிறைந்துள்ளது.  பரங்கிவிதையானது, மாரடைப்பு நோயில் இருந்து இதயத்திற்கு பலத்தை கொடுத்து காக்கின்றது.

பரங்கிவிதையில் உள்ள இன்னொரு விசயம் என்ன வென்றால், பரங்கி விதையை அதிகமாக உட்கொள்ளும் போது நமக்கு, சர்க்கரை நோயை எதிர்க்கும் திறன் கிடைத்துவிடுகின்றது.  இந்த விதையில் உள்ள சக்தி நமக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கின்றது.

ஆண்கள் தினமும் ஒரு சிறிய அளவு பரங்கி விதையை தோல் நீக்கி, சாப்பிட்டு வந்தால், விந்தணுக்கள் உற்பத்தி அதிகரித்துவிடும்.  விந்தணுக்களுக்கு அதிக பலம் கிடைக்கும்.  ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

வேலைகளைப்பில் வந்தால் ஒரு ஸ்பூன் விதைகளை நன்றாக மென்று சாப்பிட்டால், தூக்கமாத்திரை தேவையேயில்லை நன்றாக உறங்கலாம். பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு விலை அதிகம், நம் ஊரில் கிடைக்கும் இந்த பரங்கிவிதையை இனிமேல் தூக்கிப்போடாமல், உலர வைத்து சாப்பிடப்பயன்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published.