நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி?

lngs

உலகமெங்கும் நுரையீரல் நோயினால் அவதிப்படுபவர்கள் நிறைய பேர்.  ஆஸ்துமா. நுரையீரல்சுழற்சி, மூச்சுத் திணறல், அடிக்கடி சளி பிடிப்பது போன்ற பிரச்சனைகளால் தான் அதிகம்பேர் அவஸ்தைக்கு ஆளாகிறார்கள்.  அதுவும் புகை பிடிக்காமல் அதிகப்படியான தூசிகள், சுற்றுச் சூழல் மாசுபாடு போன்றவற்றால் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மத்தியில் நாற்பத்தைந்து வருடங்களாக புகை பிடித்து, ஆரோக்கியமான நுரையீரல் செயல்பாட்டைக் கொண்டவர்களும் உள்ளனர்.  இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது நுரையீரலை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள நுரையீரலை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.   ஆரோக்கியமான நுரையீரலுக்கு அவசியம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்று உள்ளன.  அவற்றை சாப்பிடலாம். உங்கள் நுரையீரலை 3 நாட்களில் சுத்தம் செய்யும் வழிமுறையான தமிழ் போல்ட்ஸ்கை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  அவற்றை பின்பற்றி வந்தால் கண்டிப்பாக 3 நாட்களில் நுரையீரலை சுத்தமாக வைத்து நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.  சரி! இப்போ அந்த வழிமுறையைப் பார்ப்போமா.

மூன்று நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

  1. பால் பொருட்களைத் தவிர்க்கவும்.

இரண்டு நாட்கள் பால் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்த பிறகு, நுரையீரலை சுத்தம் செய்ய வேண்டும்.

  1. மூலிகை தேநீர்.

நுரையீரலை சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் முந்தைய நாள் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கப் மூலிகை தேநீர் சாப்பிட வேண்டும்.  இதனால் அனைத்து வகையான டாக்ஸின்களும் குடலில் இருந்து ளெியேறுகிறது.  அதற்கு இந்நாட்களில் அதிகப்படியான் கடுமையான வேவைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

  1. எலுமிச்சை நீர்,

நுரையீரலை சுத்தம் செய்யும் முதல் நாளன்று காலை உணவிற்கு முன் இரண்டு எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து 300 மிலி. தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

  1. அன்னாசி ஜுிஸ்

எலுமிச்சை சாறு குடித்த 1 மணி நேரம் கழித்து அன்னாசி ஜுிஸ் 300 மிலி குடிக்க வேண்டும்.  இந்த ஜுிஸில் சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ளது.

  1. கேரட் ஜுஸ்

காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் 300 மிலி சர்க்கரை சேர்க்காத காரட் ஜுஸ் குடிக்க வேண்டும்.  கேரட் ஜுஸானது இரத்தத்தை அமிலத்தன்மையில இருந்து காரத்தன்மைக்கு மாற்றி பராமரிக்கிறது.  தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

  1. பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜுஸ்

மதிய சாப்பிட்டின் போது 400 மிலி பொட்டாசியம் அதிகம் உள்ள ஜுஸ் ஒன்றை குடிக்க வேண்டும்.  இது நுரையீரலை சுத்தப்படுத்தும் சிறப்பான டானிக் ஆகும்.  பீட்ருட், அவகேடோ, தக்காளி போன்றவை பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. கிரான் பெர்ரி ஜுஸ்

இரவு தூங்குமுன் 400 மிலி. கிரான் பெர்ரி ஜுஸ் குடிக்க வேண்டும். இது நுரையீரலில் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது.  ஆரஞ்சு ஜுஸ் அல்லது கறுப்பு திராட்சை நீர் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கவும்.

  1. உடற்பயிற்சி

மேலே கூறப்பட்டுள்ளவைகளை மூன்று நாட்கள் பின்பற்றும் போது, தவறாமல் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.  அதிலும் வியர்வை நன்கு வெளியேறும்படி குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.  இதனால் வியர்வையின் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

  1. வெதுவெதுப்பான நீர்

தினந்தோறும் 20 நிமிடம் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.

  1. ஆவி பிடிக்கவும்

சுடுநீரில் 5-10 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, தண்ணீர் குளிரும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.  அப்படி ஆவி பிடிக்கும் பொழுது அந் நீராவியை சுவாசிக்க வேண்டும்.  இதனால் மூச்சுக் குழாயில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுகிறது.  மற்றும் ஆவி பிடித்தபின் சுத்தமான துணியால் முகத்தை கழுவினால் முகம் நட்சத்திரம் போன்று பிரகாசிக்கும்.

குறிப்பு ; நுரையீரல் சுழற்சி, சைனஸ், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவை சீக்கிரம் குணமாக மேற்கூறியவற்றை 3 நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published.