பாலியல் வன்கொடுமைக்கு தண்டனையாக ஆண்மையை நீக்கிவிடலாமா..?

injection

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆண்மையை அகற்றும் கோரிக்கையை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் தனிச் சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்கும்படி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இக்குற் றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேரனா குமாரி உச்ச நீதிமன் றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு போதுமான சட்டங்கள் இல்லை. எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் ஆண்மையை நீக்கி தண்டனை வழங்க உத்தர விட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன்பாக விசார ணைக்கு வந்தது. ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கும் முடிவை ஏற்க முடியாது. உணர்வுகளின் அடிப்படையிலும், ஆவேசத்தின் அடிப்படையிலும் தண்டனை வழங்க முடியாது. தண்டனையை விதிப்பதில் நியாயம் இருக்க வேண்டும் என்று கூறினர்.

images (24)

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது. அதேநேரம், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்வது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் பணி. அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. என்ன மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்யக் கூடாது” என்று வாதிட்டார்.

இதையடுத்து, 2 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறிப்பிட்டு அவர்களை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் தனிச் சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டும். இத்தகைய குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published.