ஜப்பானில் ஒரே ஒரு பெண்ணுக்காக இயக்கப்படும் ரயில்…..

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கமி–கிரதாகி பகுதியில் செல்கிறது. ஆனால் இப்பகுதியில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. தற்போது அந்த ரெயிலில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்கிறார்.
அவர் ஒரு பள்ளி மாணவி ஆவார். அவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவரை ஏற்றிச் செல்வதற்கும், இறக்கி விடுவதற்கு மட்டும் தினமும் 2 முறை இந்த ரெயில் இங்கு நிறுத்தப்படுகிறது.
அந்த மாணவி வருகிற மார்ச் மாதம் பள்ளி படிப்பை முடித்தவுடன் அப்பகுதியில் அந்த ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டே பயணிகள் ஏறாவிட்டாலும் மாணவியின் படிப்பை கருத்தில் கொண்டு இந்த ரெயிலை ஜப்பான் அரசு இயக்குகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைக்கு முக்கியத்துவம் தரப்படும் உண்மை இல்லை என்பவர்கள் 6000 பள்ளிகளில் கழிவறை கட்டிதந்த பிறகு சொல்லட்டும்
உண்மை தான் சகோ!
ஆனா. அதுக்கு இப்ப என்னா பண்ண முடியும்? நம்ம எதாவது வாய திறந்தா ”கருத்து கந்தாமி”னு சொல்லி ஓரத்துல உக்கார வைச்சுடுவாங்க.